பிரகாஷ் ராஜ் படங்களில் நடிக்க வாழ்நாள் தடை... கன்னட பிலிம் சேம்பருக்கு இந்து அமைப்பினர் கடிதம்?
நடிகர் பிரகாஷ் ராஜ் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெங்களூரு: நடிகர் பிரகாஷ் ராஜ் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் கன்னட பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ராம்லீலா குறித்து பிரகாஷ் ராஜ் பேசியது சர்ச்சையானது. ராம்லீலா செயல்பாடுகளை குழந்தை ஆபாசத்துடன் ஒப்பிட்டு அவர் பேசியதாக இந்து அமைப்புகள் கொதித்தெழுந்தன. பிரகாஷ் ராஜ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என கன்னட பிலிம் சேம்பருக்கு இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்து மதத்தையும், இந்து மத தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பேசி வருவது, இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











