»   »  காதல் ஒர்க்அவுட் ஆக, வெர்ஜினிட்டியை இழக்க நடிகை ஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள்

காதல் ஒர்க்அவுட் ஆக, வெர்ஜினிட்டியை இழக்க நடிகை ஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள்

டெல்லி: டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை வழிபட உள்ளனர்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் அதிலும் குறிப்பாக அந்த கல்லூரி விடுதியில் தங்கியிருப்போர் ஆண்டுதோறும் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்கள்.

காதலர் தினத்தை கொண்டாட விடுதி மாணவ, மாணவியர் தயாராகிவிட்டனர்.

ஜாக்குலின்

ஜாக்குலின்

விடுதி மாணவ, மாணவியர் சேர்ந்து வாக்களித்து காதல் தேவதையாக ஒரு நடிகையை தேர்வு செய்வார்கள். இந்த ஆண்டு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை தேர்வு செய்துள்ளனர்.

அதிதி ராவ்

அதிதி ராவ்

நடிகைகள் ஜாக்குலின், நர்கிஸ் ஃபக்ரி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்று குழம்பி ஒருவகையாக ஜாக்குலினை தேர்வு செய்துள்ளனர்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக காதல் குரு என்று நடிகர் ரன்வீர் சிங்கை தேர்வு செய்துள்ளனர். வழக்கமாக தம்தாமி மாதா அதாவது காதல் தேவதையை மட்டுமே தேர்வு செய்வார்கள்.

வழிபாடு

வழிபாடு

முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் பூசாரி போன்று வேடம் தரித்து கல்லூரி வளாகத்தில் உள்ள வெர்ஜின் மரத்திற்கு பூஜை செய்வார். அந்த மரத்தில் ஜாக்குலின், ரன்வீர் சிங் ஆகியோரின் புகைப்படங்களை தொங்க விடுவார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

பூஜையின்போது மாணவர்கள் பலூன்கள் மற்றும் நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகளை வெர்ஜின் மரத்தில் தொங்கவிடுவார்கள். அவ்வாறு செய்தால் 6 மாதத்திற்குள் காதல் மலருமாம், ஓராண்டுக்குள் வெர்ஜினிட்டியை(கன்னித்தன்மை) இழப்பார்களாம்.

English summary
Students of Hindu College in Delhi has decided to worship Bollywood actress Jacqueline Fernandez as 'Damdami Mata' - Goddess of love on Valentine's Day. They have chosen actor Ranveer Singh as love guru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil