ஷாருக்கான் சினிமாவுக்கு காங்கேயத்தில் தடை: மும்பையில் காங்கேயம் கோவில் ‘செட்’

Hindu endonment board ban Sharuk khan's film shooting
காங்கேயம்: இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை படமாக்க தடை விதிக்கப்பட்டதால் காங்கேயம் கோவிலை மும்பையில் செட் அமைத்து தயாரிக்க படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனராம்.

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய படம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இது குறித்து சென்னை எக்ஸ்பிரஸ் படகுழுவினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது,

காதல் சொல்லும் காட்சி...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை முருகன் கோவிலில் ஷாருக்கான், தீபிகாபடுகோன் ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. தீபிகாவிடம் ஷாருக்கான் தனது காதலை கூறும் காட்சி கோவிலின் உட்புற பகுதியில் படமாக்கப்பட்டது.

பெர்மிஷன் வாங்குனீங்களா...?

படப்பிடிப்பு நடத்த இந்து அறநிலையதுறையின் அனுமதி பெறாமல் கோவிலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் அதிகாரிகள் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர்.

பெர்மிஷன் வாங்கணும்...

சில காட்சிகள் எடுக்கப் படாமலேயே படப்பிடிப்பு ரத்து செய்யபட்டது. பின்னர், படப்பிடிப்பு குழுவினர் உரிய அனுமதி பெற்று மீதம் உள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்று அறிவித்தனர்.

தரமுடியாது....

இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

செட் போடப்போறோம்...

படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் வட்டமலை முருகன் கோவில்போல் செட் போட்டு மீதம் உள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளோம். வட்டமலை முருகன் கோயில் உட்புறம் அளவு கணக்கீடு செய்யப்பட்டு அதேபோல் மும்பையில் செட் போட்டு அடுத்த சில காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அசுத்தம் செய்து விடுவர்...

இது குறித்து இந்து அறநிலைய துறை அதிகாரிகளை கேட்டபோது, 'பொதுவாக கோவில்களில் படம் எடுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. காரணம் படப்பிடிப்பு குழுவினர் கோவில்களை அசுத்தம் செய்து விடுகின்றனர்.

பக்தர்கள் எதிர்ப்பு...

இது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. சினிமா படம் எடுக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எந்த படம் எடுக்கவும் தமிழக கோவில்களில் அனுமதி வழங்கபடுவதில்லை என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X