twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ், வெற்றிமாறன் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்.. அசுரனுக்கு எதிராக இந்து மகா சபா போலீசில் புகார்!

    அசுரன் படம் மக்கள் மத்தியில் வன்முறையை விதைக்கிறது என்று கூறி இந்து மகா சபா நடிகர் தனுஷ், வெற்றிமாறன், தாணு உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

    |

    Recommended Video

    Asuran Box Office : பட்டையகெளப்பும் அசுரன் வசூல்-வீடியோ

    சென்னை: அசுரன் படம் மக்கள் மத்தியில் வன்முறையை விதைக்கிறது என்று கூறி இந்து மகா சபா நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

    அசுரன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இன்னும் ஒரு நாளில் 100 கோடி வசூலை பெற்று விடும் என்று தொட்டுவிடும் என்று கணித்து இருக்கிறார்கள்.

    பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் வெக்கை. இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

    டேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா!டேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா!

    படம் எப்படி

    படம் எப்படி

    இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த படம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக மிக கடுமையான வாதங்களை வைத்தது. முக்கியமாக பஞ்சமி நிலங்கள் எப்படி அபகரிக்கப்பட்டது.

    எப்படி பறித்தனர்

    எப்படி பறித்தனர்

    எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கடுமையான இந்த படத்தில் பேசப்பட்டது. இந்த படத்தில் ஜாதிய ஆதிக்கத்திற்கு எதிராக கடுமையான வசனங்கள் வாதங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சமூக வலைதளத்தில் படம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன வசனம்

    என்ன வசனம்

    இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது இந்து மகா சபா போர்க்கொடி தூக்கி உள்ளது. அகில பாரத இந்து மகா சபாவின் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் மாயனூர் ராஜவேலு இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

    வன்முறை

    வன்முறை

    அதில், இந்த படம் வன்முறையை தூண்டுகிறது. பள்ளி மாணவர்கள் இடையே போராட்ட விதையை விதைக்கிறது. மாணவர்களை போராட்டம் செய்ய அழைக்கிறது. அரசுக்கு எதிராக புரட்சியை தூண்டுகிறது.

    என்ன ஒற்றுமை

    என்ன ஒற்றுமை

    தமிழக மக்கள் இடையே இருக்கும் ஒற்றுமையை இந்த படம் குலைக்கிறது. இதில் இருக்கும் பல காட்சிகள் மிகவும் மோசமாக கொலை, அடிதடி என்று வன்முறையை தூண்டுகிறது. அதனால் நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மகா சபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது .

    English summary
    Hindu Maha Sabha filed a complaint against Dhanush and Crew for Asuran movie in Karur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X