twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் படத்தில் நடிகை சன்னி லியோனா?: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு

    By Siva
    |

    சென்னை: தமிழ் படங்களில் நடிகை சன்னி லியோன் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2 படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். தற்போது அவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். சன்னி தமிழ் படத்தில் ஆட இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சன்னி லியோன் போன்ற நீலப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகிவிடும். நீலப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்து உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகிவிடும். ஒரு போதும் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். அதை உரிய வகையில் தடுத்து நிறுத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Hindu Makkal Katchi chief Arjun Sampath said in a statement that they won't allow porn star turned Bollywood actress Sunny Leone to act in tamil movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X