திமுகவை நேரடியாக அட்டாக் செய்யும் காவியின் கலைக்கூடத்தின் ’இந்துடா’.. பட டிரைலரை வெளியிட்ட H ராஜா

சென்னை: தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் படங்கள் வெளியாவது என்பது புதிய விஷயமல்ல. அப்படி இந்துத்துவா அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் இந்துடா. காவியின் கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சின்னப்பா கணேசன் என்ற இயக்குநர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலரை பாரதிய ஜனதா கட்சியின் ஹெச். ராஜா வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் திமுகவுக்கு எதிராகவே சில வசனங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணிக் கட்சிகளையும் விமர்சித்து வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது பேசு பொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாக ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், " அன்புத் தம்பி சின்னப்பா கணேசன், திரைத்துறையில் 21 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்துடா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் தமிழ்த்திரை உலகில் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு கதையை துணிச்சலுடன் படமாக்கி உள்ளார். குறிப்பாக உண்மையை உரக்க பேசி உள்ளார்.இந்துடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டேன். இப்போது டிரைலரையும் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

H Raja releases the trailer of Hinduda a film with political themes that has sparked debate for its dialogues criticising DMK and its allies

இந்துடா: இந்துடா திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், பங்கெடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கூட்டு முயற்சி மூலம் இத்திரைப்படத்தை தயாரிக்க நிதி பங்கீடு வழங்கிய அனைத்து தேச பக்தர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்துடா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதோடு இந்த திரைப்படத்திற்கு நாம் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுகவை விமர்சித்து: இந்த படத்தின் டிரைலர் தொடங்கும் போதே இது யாரும் சொல்லாத கதை என்ற டைட்டில் கார்டுடன் தான் தொடங்குகிறது. நீங்களும் 200 ரூபாய் உ.பிஸ் தானா? இந்து பெயர் மட்டும் வேண்டாம், ஆனால் இந்துக்களுக்கான தனித்தொகுதியில் நின்னு போட்டியிலாமோ?, இதற்கு பெயர் தான் திரா - விடியா மாடல், 25 கோடி ரூபாய்க்கு அடகு வைத்த உங்க கட்சியைத் திருப்பவே முடியவில்லை, நாங்களே கிறிஸ்தவர்கள் தான், ஆனால் எங்கள் வீட்டில் எல்லோரும் இந்து ஆதி திராவிடர் அப்படினுதான் சான்றிதழ் வாங்கி வைத்துள்ளோம் என்பது போன்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இது பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

H Raja releases the trailer of Hinduda a film with political themes that has sparked debate for its dialogues criticising DMK and its allies

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X