என்ன மனுஷன்யா! கதறி அழுத ரசிகையின் கனவை நனவாக்கிய ஹிப் ஹாப் ஆதி - டிரெண்டாகும் வீடியோ!
கோவை: இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியின் பி.டி. சார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. பி.டி. சார் படம் ரிலீசுக்கு பின்னர் ஹிப் ஹாப் ஆதியின் தீவிர ரசிகை ஒருவர், படத்தின் புரோமசன் நிகழ்ச்சி ஒன்றில் ஹிப் ஹாப் ஆதியை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, அவருடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை என கதறி அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இது இணையவாசிகள் மத்தியில், ஹிப் ஹாப் ஆதிக்கு கண்ணீர் சிந்தும் அளவுக்கு ரசிகை இருக்காங்களா? என் ஆச்சரியம் கொள்ள வைத்தது.

பி.டி. சார் திரைப்படம்: இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான படம் பி.டி. சார். இந்த படத்தின் புரோமசன் வேலைகளுக்காக கோவையில் உள்ள திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஆதி. அங்கு இருந்த ரசிகை ஒருவர், "ஹிப் ஹாப் ஆதிதான் எனது ரோல் மாடல், அவரோட எல்லா படங்களையும் பார்த்துடுவேன், அவரோட எல்லா பாட்டையும் கேட்டுடுவேன். சின்ன வயசுல இருந்தே அவர பார்க்கணும்னு ரொம்ப ஆசை. இன்னைக்கு பார்த்துட்டேன். ஆனா போட்டோ எடுக்க முடியலனு வருத்தமா இருக்கு" எனக் கூறிக்கொண்டு கதறி அழுது கண்ணீர் சிந்தி இருந்தார்.
வேகமாக இணையத்தில் பரவிய இந்த வீடியோ, ஹிப் ஹாப் ஆதி கண்களிலும் பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ஆதி, தனது உதவியாளரிடம் கூறி, எப்படியாவது இந்த பொண்ண எங்கிட்ட கூட்டீட்டு வாங்க, நான் அவங்கள பார்த்தே ஆகணும் எனக் கூறியுள்ளார். இதனால், ஆதியின் தீவிர ரசிகையை, கண்டுபிடித்து ஆதியிடம் அழைத்து வந்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதியும் அவரது ரசிகையும் சந்தித்து பேசிக் கொள்ளும் வீடியோவை ஆதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆதியை சந்தித்த ரசிகை: அந்த வீடியோவில், நான் சமூகவலைதள உலகத்திற்குள் வர விரும்பவில்லை, அதில் யாராவது எதாவது சொல்லி விடுவார்கள் என்ற பயம், நான் அழுதது வைரலானபோது கூட எனக்கு அதுதான் தோன்றியது என ஆதியின் ரசிகை கூற, அதற்கு, சமூக வலைதளத்தில் யார் என்ன சொன்னா நமக்கு என்ன? யார் தப்பா பேசுவாங்க? என்னையும் தான் ரொம்ப தப்பா பேசுவாங்க, அதெல்லாம் பார்த்தா ஆகுமா? நம்ம எல்லோரும் கெத்துதான்" என ஆதி தனது ரசிகைக்கு அறிவுரை கூறி அவருடன் போட்டோ எடுத்த பின்னர் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பி.டி. சார் வசூல் எப்படி?: கோடை விடுமுறையின் இறுதி கட்டத்தில் வெளியான பி.டி. சார் திரைப்படம், ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் படத்துடன் மோதியது. இரண்டு படங்களுமே அதிகப்படியான வசூலைக் வாரிக் குவிக்கவில்லை என்றாலும், ஓரளவிற்கு வசூல் செய்தது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹிப் ஹாப் ஆதியின் பி.டி. சார் திரைப்படம் மொத்தமாகவே கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடியை வசூல் செய்திருந்தது.


Click it and Unblock the Notifications











