சிங்கிள் பசங்க பாடல் செய்த சாதனை.. குஷியில் ஹிப்ஹாப் ஆதி!
சென்னை : ஹிப்ஹாப் ஆதி இப்பொழுது அன்பறிவு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோவான பிறகும் தொடர்ந்து இசையமைத்து வரும் இவர் தன்னுடைய படங்களுக்கு தானே இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் நட்பேதுணை படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பசங்க பாடல் தற்பொழுது புதிய சாதனையை செய்து ஆதியை குஷிப்படுத்தி உள்ளது.

துள்ளலான இசை
தமிழ் சினிமாவில் தனது துள்ளலான இசையின் மூலம் இளம் ரசிகர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வரும் ஹிப்ஹாப் ஆதி தெலுங்கிலும் சில படங்களுக்கு இசையமைத்து அங்கும் பல ஹிட்டுகளை கொடுத்துள்ளார். பல்வேறு ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர் தமிழ் சினிமாவிற்கு ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

கட்டி இழுக்கும் ரசனை
ஹிப் ஹாப் கலந்த புதுமையான தமிழ் இசை கேட்கும் அனைவரையும் கட்டி இழுக்கும் ரசனை என இசையமைப்பாளராக கலக்கிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தில் நடித்து கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவில் கால் தடத்தை பதித்தார். முதல் திரைப்படமே வெற்றி என்ற நிலையில் அதைத்தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்து இப்பொழுது வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இரட்டை வேடத்தில்
கோயம்புத்தூர் மற்றும் சென்னை என இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த ஆதி முதல் முறையாக வில்லேஜ் பாயாக அன்பறிவு என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நெப்போலியன் மற்றும் ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முதன்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் இதில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை
இதுவரை ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளிவந்த பாடல்கள் பல்வேறு சாதனைகளை செய்திருக்கும் நிலையில் இப்பொழுது நட்பே துணை படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கிள் பசங்க பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது ஆதி மட்டுமல்லாமல் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக தமிழ் பாடல்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு இருந்து வரும் அனைவரையும் ஆட்டம் போட வைத்த சிங்கிள் பசங்க பாடல் தற்பொழுது 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. தொடர்ந்து பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











