ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : ஹிப்ஹாப் ஆதி இசை அமைப்பாளராக இருப்பினும் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கலக்கிக் கொண்டு உள்ளார்.

அந்த வகையில் வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை,நான் சிரித்தால் ஆகிய படங்கள் ஹிட் அடித்தன. முதல் மீசையமுறுக்கு படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

இந்த நிலையில் மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வெளியாகி உள்ளது.

இசையால் கவர்ந்த

இசையால் கவர்ந்த

துள்ளலான ஹிப்ஹாப் இசைக்கு மிகவும் பெயர் போனவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் இவர் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையால் அனைவரையும் கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி நடிகராகவும் கலக்கிக் கொண்டு உள்ளார் அந்த வகையில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹிபாப் ஆதி அந்த படத்தை தானே இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

சிவகுமாரின் சபதம்

சிவகுமாரின் சபதம்

அதன்பிறகு நட்பே துணை,நான் சிரித்தால் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு தானே இசையமைக்கும் பழக்கத்தையும் ஆதி கொண்டுள்ளார். இந்த நிலையில் மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்கும் சிவகுமாரின் சபதம் படத்திலும் தானே ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உடன் இணைந்து ஹிப் ஹாப் ஆதி தயாரித்தும் வருகிறார்.

ஃதிங்க் மியூசிக்

ஃதிங்க் மியூசிக்

மாதுரி ஜெயின் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை ஃதிங்க் மியூசிக் பெற்றுள்ளது. அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

செப்டம்பர் 30

செப்டம்பர் 30

இந்நிலையில் படக்குழு சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதன்படி செப்டம்பர் 30 ஆம் தேதி சிவகுமாரின் சபதம் உலகமெங்கும் ரிலீசாகிறது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,இயக்கம்,இசை, நடிப்பு என ஹிப்ஹாப் ஆதி இந்த படத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மிக விரைவிலேயே டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X