twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கம்... வீடியோக்களும் அழிப்பு !

    |

    சென்னை : ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அந்த யூடியூப் தளத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டு, அந்த பக்கத்தின் பெயரை அல்கோரண்ட் சோஷியல் நியூல் என்று பெயரை மாற்றி உள்ளனர்.

    100 முத்தம் கொடுக்க ஆசைப்படும் நாசர்...யாருக்கு, எதுக்குன்னு தெரியுமா ? 100 முத்தம் கொடுக்க ஆசைப்படும் நாசர்...யாருக்கு, எதுக்குன்னு தெரியுமா ?

    இதுகுறித்து ஹிப் ஹாப் ஆதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக தெரிகிறது.

    இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. ராப் இசைக்கலைஞரான இவர் 2015ம் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ஆம்பள திரைப்படத்திற்கு இசையமைத்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

    ஹீரோவாக

    ஹீரோவாக

    இதையடுத்து, மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. தற்போது சிவக்குமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சிவக்குமாரின் சபதம் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகின.

    யூடியூப் சேனல் ஹேக்

    யூடியூப் சேனல் ஹேக்

    இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, அந்த யூடியூப் தளத்தில் இருந்த அனைத்து வீடியோக்களையும் ஹேக்கர்ஸ் அழித்துள்ளனர். மேலும் அந்த பக்கத்தில் பெயரை அல்கோரண்ட் சோஷியல் நியூல் என்று பெயரை மாற்றி உள்ளனர். இதனால் ஹிப் ஹாப் ஆதி மிகுந்த மன வருத்தமடைந்துள்ளார்.

    முடக்கப்பட்டது

    முடக்கப்பட்டது

    இதே நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டது. இதையடுத்து குஷ்பு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை நேற்று மீண்டும் பெற்றார். தற்போது, இதே போல ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனலும் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Hip Hop Tamizha is a sought after music composer and an actor. Hip Hop Adhi you tube channel was hacked by a stranger and the name of the channel was changed to 'Algorand Social Newes'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X