ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆல்பம் பாடல்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர்.

இசையமைப்பாளராக கலக்கி வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவும் தொடங்கி வெற்றி படங்களை கொடுத்தார்.

தற்போது ஹிப் ஹாப் தமிழாவின் 4வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகரும், இயக்குனரும்

நடிகரும், இயக்குனரும்

2017ம் ஆண்டு சுந்தர்.C தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிகராகவும், இயக்குனராகவும் "மீசைய முறுக்கு" படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கலக்கி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் ஆதி. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.

ஹாக்கி வீரன்

ஹாக்கி வீரன்

2019ம் ஆண்டு பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஆதி ஹாக்கி வீரராகவும், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், அரசியல் சார்ந்தும் "நட்பே துணை" படம் வெளியானது. வழக்கம் போல ஆதியின் இசை பாராட்டப்பட்டு படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

கடந்த ஆண்டு ராணா இயக்கத்தில் வெளியான "நான் சிரித்தால்" படத்தில் ஆதி வித்தியாசமான கதாபாத்திரத்தை முயற்சி செய்து நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதையடுத்து ஆதியின் அடுத்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை ஆதியே இயக்குகிறார் என்று சில செய்திகள் வெளியானது, இந்த படத்தின் தலைப்பு சிவக்குமாரின் சபதம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X