ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!

சென்னை : இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படமான "அன்பறிவு" படப்பிடிப்பு தடபுடலாக ஆரம்பமானது.

பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

எக்கச்சக்கமான இளம் ரசிகர்களை கொண்டுள்ள ஹிப் ஹாப் ஆதியின் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாகவும் அதே சமயம் பாக்ஸ் ஆபீஸில் தெறிக்க விட்டு வரும் நிலையில் "அன்பறிவு" படத்தின் படப்பிடிப்பு படுஜோராக தொடங்கியது.

தவிர்க்க முடியாத

தவிர்க்க முடியாத

திரைத்துறையில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் பலரும் அதே சமயம் நடிகர்களாகவும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார்.

முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர்

முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர்

மயக்கும் மெலோடி பாடல்கள், இன்னிசை, கானா பாடல்கள் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்த பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் புயல் வேகத்தில் ஹிப் ஹாப் இசையை தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ஆதி.

மேடை நிகழ்ச்சிகளிலும்

மேடை நிகழ்ச்சிகளிலும்

இண்டிபெண்டன்ட் ஆர்ட்டிஸ்ட்டாக பல மேடை நிகழ்ச்சிகளிலும் ஆல்பம்களிலும் பாடி பிரபலமான ஆதிக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பு இருந்த நிலையில் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டு முதல் படத்திலேயே பக்காவான துள்ளல் இசையை கொடுத்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தந்திருந்தார்.

ஹீரோவாக அறிமுகமாகி

ஹீரோவாக அறிமுகமாகி

ஆம்பள,இன்று நேற்று நாளை, தனிஒருவன், கதகளி, கத்திசண்டை,கவண் என தமிழில் கலக்கிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான தனி ஒருவன் ரீமேக் துருவா திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். அதன்பின் 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பட்டையை கிளப்பி திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

வித்தியாசமான கதைகளில்

வித்தியாசமான கதைகளில்

மீசைய முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாக நடித்துக் கொண்டே பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் ஹிப் ஹாப் ஆதி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அதே சமயம் நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளில் நடித்து இதுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியை கொடுத்து வருகிறார்.

காஷ்மீரா கதாநாயகியாக

காஷ்மீரா கதாநாயகியாக

இந்நிலையில் அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் "அன்பறிவு" திரைப்படத்தில் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் இப்போது அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் நெப்போலியன், விதார்த்,
சங்கீதா கிரிஷ், சாய் குமார் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காஷ்மீரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தவர்.

அன்புடன் அன்பறிவு ஆரம்பமானது

அன்புடன் அன்பறிவு ஆரம்பமானது

"அன்பறிவு" படத்தின் படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கும் விதமாக ஆதி தனது சமூக வலைதளப் பக்கங்களில் அன்புடன் அன்பறிவு ஆரம்பமானது என்ற பஞ்ச் டயலாக்குடன் தெரிவித்திருக்க பக்கா கமர்சியல் திரைப்படமாக "அன்பறிவு" படப்பிடிப்பு நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X