பைக்கில் ஹில்ஸ் ரைடு.. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஜாலி ட்ரிப்!

சென்னை: நடிப்பு, இசை என பிசியாக இருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது கிடைத்த ஓய்வை சரியாக பயன்படுத்தி தன் பைக்கில் ஹில்ஸ் ரைடுக்கு சென்றுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்து உள்ளார்.

Hip Hop Tamizhan aadhi bike raid in hills

ஹிப்ஹாப் தமிழா கடைசியாக 'நட்பே துணை' படத்தில் நடித்து இருந்தார் .இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கி இருந்தார் .அதை தொடர்ந்து தற்போது ஹிப்ஹாப் தமிழா நடித்து வரும் படம் தான் 'நான் சிரித்தால்' இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரிக்கிறார்.

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா இதற்கு முன்பே இரு படங்களில் நடித்துள்ளார். மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய படங்கள் ஆகும். மீசைய முறுக்கு படத்தை தான் இயக்கி நடித்து இருந்தார் மற்றும் அதற்கு இசையும் அமைத்து இருந்தார் அந்த படம் அவரின் வாழ்க்கையை பற்றியும், அவர் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு கமர்சியலாக உருவாக்கப்பட்டு இருந்து. மீசைய முறுக்கு படம் மிக பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது மட்டும் அல்லாமல் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.

Hip Hop Tamizhan aadhi bike raid in hills

அதற்கு பின் பார்த்திபன் தேசிங்கு என்ற அறிமுக இயக்குனர் மூலம் நட்பே துணை இயக்கபட்டது அந்த படத்திற்கும் இயக்க மேற்பார்வை ஹிப் ஹாப் தமிழா ஆதியே செய்து இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது .இந்த படத்தில் ஒரு ஹாக்கி வீரராக நடித்திருப்பார் ஹிப்ஹாப் தமிழா.

நான் சிரித்தால் படத்தையும் தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் நடிகர் ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக 'தமிழ் படம்-2' நடிகை ஜஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார் .

தற்போது கிடைத்த இடைவேளையில் ஹிப்ஹாப் தமிழா தனது பைக்கிலே மலை பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்துள்ளார், இந்த நிகழ்வை செல்லும் வழியில் ஒரு வீடியோவாக எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் ஹில்ஸ்ல பைக் ஓட்டுனாலே செம்ம ஜாலி தான் என்றும் பதிவிட்டு இருக்கிறார் .

ஹிப் ஹாப் தமிழா ஹீரோவாக நடித்து வரும் மூன்றாவது படம் தான் நான் சிரித்தால். முதல் இரு படங்களை வெற்றி அடைய செய்து விட்டு தற்போது மூன்றுவது படத்திற்காகவும் நடிப்பு இசை என இரண்டிலும் நன்கு கவனம் செலுத்தி வருகிறார் ஹிப்ஹாப் தமிழா .

என்னதான் நடித்து அசத்தி வந்தாலும் அவரது அடையாளம் இசை தான். நடிக்கும் அதே நேரத்தில் தனது நான் சிரித்தால் படத்தை தவிர்த்து வைபவ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஆலம்பனா படத்திற்கும் ஆதியே இசையமைத்து வருகிறார். மேலும் தெலுங்கில் ஏ1 எக்ஸ்பிரஸ் என்ற படத்திற்கும் இசையமைக்கிறார். பிஸியான நேரங்களுக்கு இடையில் கிடைக்கும் இடைவேளையை சரியாக பயன்படுத்தி தன் பைக்கில் ஊர் சுற்றுவது ஹிப்ஹாப் தமிழாக்கு பிடித்த ஒன்று அதை தான் தற்போதும் செய்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X