ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

சென்னை : தமிழ் சினிமாவுக்கு ஹிப்ஹாப் இசையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி.

இப்பொழுது ஹீரோவாக அன்பறிவு மற்றும் சிவக்குமாரின் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தெலுங்கிலும்

தெலுங்கிலும்

தனது துள்ளலான இசையின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக உள்ள ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில திரைப்படங்களுக்கு இசையமைத்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

வித்தியாசமான கதைகளை

வித்தியாசமான கதைகளை

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி கொண்டு வரும் ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் முதன் முறையாக ஹீரோவாக நடித்து அறிமுகமாகியதுடன் தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

நட்பே துணை சமீபத்தில் தெலுங்கில் A1 எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட் அடித்தது இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து இருப்பார். இப்படத்திற்கும் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். தற்பொழுது அன்பறிவு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வர உடன் நெப்போலியன் மற்றும் ஊர்வசி என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஜூன் 3

ஜூன் 3

இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றி ஹீரோவாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே ரசிகர்களுக்காக தொடர்ந்து ஆல்பம் பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டு வரும் ஆதி இப்பொழுது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வகையில் "இணையம்" என்ற ஆல்பம் பாடல் ஜூன் 3ஆம் தேதி திங்க் மியூசிக்கில் வெளியிட இருப்பதாக சூப்பரான அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஏலியன் தலையுடன் ரோபோ போல வேற்றுகிரகத்தில் கத்தியுடன் ஏலியன் பொம்மை ஒன்று மண்டியிட்டு உட்கார்ந்து இருக்கின்றவாறு இணையம் ஆல்பம் பாடலின் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X