ஹிப் ஹாப் ஆதியின் "இணையம்" ஆல்பம் பாடல் வெளியானது!
சென்னை : ஆதி இப்பொழுது அன்பறிவு மற்றும் சிவக்குமாரின் சபதம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் இன்றும் பல ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இணையத்தை மையமாகக் கொண்டு "இணையம்" என்ற பாடல் இப்பொழுது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தனக்கென ஒரு ஸ்டைலை
இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் திறமை மிக்க இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக் கொண்டு பெரும் இளம் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குத்துப்பாட்டுகள் முதல் தத்துவ பாடல்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.

வழக்கமாகக் கொண்டுள்ளார்
ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி இதைத்தொடர்ந்து தனி ஒருவன், இன்று நேற்று நாளை, அரண்மனை 2, கத்திச்சண்டை, கவண்,இமைக்கா நொடிகள், கலகலப்பு 2, மிஸ்டர் லோக்கல் என பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதேசமயம் ஹீரோவாக தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு தானே இசை அமைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

"இணையம்"
என்னதான் ஹீரோவாக ஆகியிருந்தாலும் ரசிகர்களுக்காக இன்றளவும் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வெளியிட்டு வரும் ஹிப்ஹாப் ஆதி போன லாக் டவுனுக்கு நான் ஒரு ஏலியன் என்ற பாடலை வெளியிட்டு கவனத்தை பெற்றார். இந்நிலையில் தற்போது "இணையம்" என்ற பாடலை திங்க் மியூசிக் மூலம் வெளியிட்டுள்ளார் .

போலியான முகங்களை
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக டெக்னாலஜி இப்பொழுது அனைவரது கைக்குள்ளும் அடங்கிக் கிடக்க அதை பயன்படுத்தி பலரும் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு போலியான முகங்களை இணையதளத்தில் உருவாக்கி ஃபேக் ஐடிகளாக வலம் வருகின்றனர். அவ்வாறு இன்டர்நெட்டில் போலியான முககவசம் அணிந்து கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் பலரது முகத்திரையைக் கிழிக்கும் பாடலாகவும், இணையதளத்தால் இப்போதுள்ள இளம் தலைமுறை எவ்வாறு சீரழிகின்றது என்பதைப் பற்றியும் இந்த "இணையம்" பாடல் அமைந்துள்ளது. மேலும் இதில் ரசிக்க வைக்கக்கூடிய ஏலியன் ரோபோ கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது . இணையம் என்பது மாயக்கண்ணாடி அதில் ஒளிந்து கொள்வோர் பலரும் பின்னாடி என ஆரம்ப வரிகளிலேயே இன்றைய சூழ்நிலையை குறிப்பிட்டுள்ளது இந்த பாடலுக்கு மேலும் சிறப்பூட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications











