பாராட்டுக்களை அள்ளும் ஹிப் ஹாப் தமிழாவின் ஆவணப்படம் "தீ வீரன்"
சென்னை: தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட நட்சத்திரமாக வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமன்றி தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
தற்போது தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை மையமாக கொண்டு "தீ வீரன்" எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஆதியின் ஆவணப்படங்கள்
ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து, பாடலை பாடி புகழ்பெற்றவர். பின்னர் நடிகராகவும் பாராட்டுகளை பெற்றார். நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் தன் கலை ஆர்வத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ஆதி. அந்த வகையில் அவ்வப்போது ஆல்பம் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறார்.

ரசிகர்கள் ஆர்வம்
தமிழ் மீது தீராத காதல் கொண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதி 8 அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஆவணப்படமான "தமிழி" படத்தை உருவாக்கினார். அது மட்டுமன்றி இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் "மாணவன்" எனும் ஆவண படத்தையும் உருவாக்கினார். ரசிகர்களும் ஆதியின் ஆவணப்படங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

தீயணைப்பு சம்பவங்கள்
தமிழக தீயணைப்பு வீரர்கள் பற்றியும், அவர்கள் பணியில் அன்றாடம் நேர்கொள்ளும் சம்பவங்களை மையப்படுத்தியும் இந்த "தீ வீரன்" படத்தை ஆதி இசையமைத்து இயக்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவ தொடங்கிய வேளையில் தான் தீயணைப்பு வீரர்களின் பணிகளை பார்த்து "தீ வீரன்" படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

நல்ல வரவேற்பு
அதன் அடிப்படையில் "தீ வீரன்" ஆவணப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். தீயணைப்புதுறையின் அற்பணிப்பையும், பிற உயிரை காப்பாற்ற அவர்கள் எடுக்கும் சிக்கலான முயற்சிகளையும் இந்த ஆவணப்படத்தில் பதிவிட்டுள்ளனர்.0


Click it and Unblock the Notifications











