நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்

சென்னை: சுந்தர் சி தயாரிக்கும் நான் சிரித்தால் படத்தில் ஆதிக்கு ஜோடியாக சேர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ்ப்படம் 2வில் மிர்சி சிவாவிற்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இப்போது ஆதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு என்னும் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அந்த படம் வெற்றியடையவே இரண்டாவது முறையாகவும் இந்த கூட்டணி உருவாகி நட்பே துணை என்ற படத்தை எடுத்து அதிலும் வெற்றி கண்டது. அந்த படத்தை இயக்கியவர் பார்த்திபன் தேசிங்கு. இயக்கம் மேற்பார்வை ஆதியே செய்திருந்தார்.

Hiphop Adhis third film Iswarya Menon Joins Naan Sirithal

இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. சுந்தர் சி மற்றும் ஆதி கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு நான் சிரித்தால் என்று பெயர் வைத்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது அதன்படி இப்படத்திற்கு 'நான் சிரித்தால்' என டைட்டில் வைத்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை இயக்குனர் ராணா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக சேர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். பிரபலமான மாடலான இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தமிழில் ஏற்கனவே தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ்ப்படம் 2வில் மிர்சி சிவாவிற்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஐஸ்வர்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சிரித்தால் படத்தில் சிரித்து இளைஞர்களை சிறையிடப்போகிறார் ஐஸ்வர்யா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X