கடைசி உலகப் போர்! போஸ்டரிலேயே மிரட்டிவிட்ட ஹிப் ஹாஃப் ஆதி! நாளை வீடியோ ரிலீஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் தனது ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாஃப் ஆதி. இவர் பாடகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும், அதன் பின்னர் இசை அமைப்பாளர், நடிகர் இயக்குநர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்று வருகின்றார். இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் கடைசி உலகப் போர். இந்த படத்தின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுள்ளது.

ஆதி கடந்த சில ஆண்டுகளாக தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக தனது பி.ஹெச்.டி ஆய்வு படிப்பில் கவனம் செலுத்தி வந்ததால், படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இப்படியான நிலையில், தனது பி.ஹெச்.டி படிப்பினை முடித்த பின்னர், பி.டி. சார் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் பெற்ற வெற்றி மூலம் இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.

Hiphop Tamizha Hiphop Tamizha Aadhi

இது மட்டும் இல்லாமல் தனது நண்பர்களுடன் இணைந்து நேரம் செலவிட்டு வருகின்றார். அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி நடத்திய டி 20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், ஹிப் ஆஃப் ஆதியை விமான நிலையம் ஒன்றில் சந்தித்த ஆஸ்திரேலியர் ஒருவர், ஹிப் ஹாஃப் ஆதியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா என நினைத்து அவருக்கு வாழ்த்து கூறினார்.

ரோகித் சர்மா: இந்த சம்பவம் தொடர்பான வீடியோவையும் ஆதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல் நேற்று வெளியிட்டிருந்த வீடியோவில் கூட தன்னுடன் இருக்கும் நண்பர் ஒருவர் குறித்து பேசியிருந்தார். அதாவது, என்னுடன் ஒருவன் இருக்கின்றான். அவன் நான் என்ன செய்கின்றேன் என்பதை ரீல்ஸாக எடுத்துப்போடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளான். இப்படித்தான் அன்றைக்கு ரோகித் சர்மா என நினைத்து ஒருவர் எனக்கு வாழ்த்து கூறியது தொடர்பாக புலம்பிக் கொண்டு இருந்ததை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவிட்டான். அதனை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

கெட்டப் பெயர்: அதனால் அவனிடம் சொல்லிவிட்டேன். நீ என்னவேண்டுமானாலும் போட்டுக்கோ ஆனால் எனது பெயர் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள் எனக் கூறிவிட்டு ஃப்ரியாக விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்களுடன் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆதி. இது தொடர்பான வீடியோக்களையும் அப்லோட் செய்திருந்தார்.

கடைசி உலகப் போர்: இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில், தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மாலை 6 மணி அளவில், தனது அடுத்தப் படமான கடைசி உலகப் போர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் அத்துடன் நாளை இந்த படம் தொடர்பான கில்ம்ஸ் வீடியோவும் வெளியாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதான் ஆதியும் அந்தமும்: இந்த படத்தினை ஹிப் ஹாப் தமிழா எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்தினை ஹிப் ஹாஃப் ஆதியே தயாரிப்பதுடன் தானே இயக்கவும், தானே நடிக்கவும், தானே இசை அமைக்கவும் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கதாநாயகி யார் என்பது உள்ளிட்டத் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் வெளியிடப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X