வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்.. கடைசி உலகப்போர் ட்ரைலர் ரிலீஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் தனது ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞரகள் மத்தியில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாஃப் ஆதி. இவர் பாடகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும், அதன் பின்னர் இசை அமைப்பளர், நடிகர் இயக்குநர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்று வருகின்றார். இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம் கடைசி உலகப் போர். இந்த படத்தின் ட்ரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆதி கடந்த சில ஆண்டுகளாக தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக தனது பி.ஹெச்.டி ஆய்வு படிப்பில் கவனம் செலுத்தி வந்ததால், படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இப்படியான நிலையில், தனது பி.ஹெச்.டி படிப்பினை முடித்த பின்னர், பி.டி. சார் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் பெற்ற வெற்றி மூலம் இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகின்றார். அதேபோல் அரண்மணை படத்தின் 4ஆம் பாகத்திற்கு இசை அமைத்திருந்தார்.

kadaisi ulaga por hiphop tamizha hiphop tamizha aadhi

கடைசி உலகப் போர்: இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி, நாசர், நட்ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி உலகப்போர் படத்தின் ட்ரைலர் இன்று அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி படக்குழு தரப்பில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தினை ஹிப் ஹாப் தமிழா எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்தினை ஹிப் ஹாஃப் ஆதியே தயாரிப்பதுடன் தானே இயக்கவும், தானே நடிக்கவும், தானே இசை அமைக்கவும் செய்கின்றார். படத்தின் ட்ரைலர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

kadaisi ulaga por hiphop tamizha hiphop tamizha aadhi

சேப்பாக்கம் மைதானம்: குறிப்பாக படத்தைப் பார்க்கும்போது பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டதைப் போல் தெரிகின்றது. அதேபோல் படம் முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளதைப் போலவும் தெரிகின்றது. ட்ரைலரிலின் இறுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானம் குண்டு வைத்து தகர்க்கப்படுவதைப் போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், பார்க்கும்போது போர் உணர்வை ஏற்படுத்துகின்றது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X