பிக்பாஸில் இன்றைக்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா...வெளியான சூப்பர் தகவல்
சென்னை : விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று சிறப்பு விருந்தினர்கள் சிலரும் கமலுடன் மேடையில் தோன்ற உள்ளனர். இது இன்று வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவிலேயே காட்டப்பட்டது.
இதில் ஒருவராக கலந்து கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி, பிரியங்காவை காப்பாற்றுவதாக அறிவிக்கிறார். ஆனால் இவர்கள் எதற்காக வந்தார்கள் என்ற கேள்வி அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கான பதில் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

ஆதியின் அன்பறிவு
இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது அன்பறிவு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கிராமத்து பொழுதுபோக்கு படமான இந்த படத்தை அறிமுக இயக்குனரான அஸ்வின் ராம் இயக்கி உள்ளார். டி.ஜே.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ரிலீஸ் எப்போ
நெப்போலியன், விதார்த், காஷ்மிரா பர்தேசி, சாய்குமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முதலில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம், தற்போது பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் இன்று ஸ்பெஷலா
ஆக்ஷன், எமோஷனல் கலந்த இந்த படத்தின் டிரைலரை நடிகர் கமலஹாசன் இன்று வெளியிட உள்ளார். அதுவும் பிக்பாஸ் ஷோ மேடையில் கமல் இந்த டிரைலரை வெளியிட போகிறார். இதற்கான ஷுட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு நிமிட டிரைலர் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பறிவு கதை இதுதான்
அன்பு, அறிவு என்ற இரண்டு கேரக்டரில் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்கும் அன்பறிவு படத்தில் நெப்போலியன் ஆதியின் தாத்தாவாகவும், சாய்குமார் ஆதியின் அப்பா ரோலிலும் நடித்துள்ளனர். இரட்டையர்களான இவர்கள் பிறந்ததும் பிரிந்து விடுகிறார்கள்.ஒருவர் அடிதடி, பழிவாங்குவது என வளர்கிறார். மற்றொருவர் சுதந்திரமாக, அமைதியான சூழலில் வளர்கிறார். சூழ்நிலையால் இடம்மாறும் இவர்கள் எப்படி பிரச்சனைகளை சமாளித்து வெளியே வருகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

வித்தியாசமான கெட்அப்பில் ஆதி
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டிற்காக பிக்பாஸ் ஷோவிற்கு வந்த போது தான் பிரியங்காவை காப்பாற்றும் அறிவிப்பை வெளியிடுகிறார் ஆதி. அன்பறிவு படத்திற்காக ஆதி வித்தியாசமான கெட்அப்பிற்கு மாறி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











