veeran Day 1 Collection : ஹிப்ஹாப் ஆதியின் வீரன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை ஹிப்ஹாப் ஆதியின் வீரன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வீரன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது, இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்தது மட்டுமில்லாமல் இசையும் அமைத்துள்ளார்
இதில், ஆதிரா ராஜ், வினை, பத்ரி, முனிஷ் காந்த், சசி செல்வராஜ், காளி வெங்கட், நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

வீரன் : மரகத நாணயம் என்ற ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கி அதில் வெற்றி கண்ட ஏ.ஆர்.கே.சரவணனின் மற்றுமொரு வித்தியாசமான படைப்பு தான் வீரன். சூப்பர்ஹீரோ படங்களை அதிகம் பார்த்திராத தமிழ் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது எனலாம்.
பல சக்திகள் : ஹிப்ஹாப் ஆதியை சிறுவயதில் மின்னல் ஒன்று தாக்கி விடுகிறது. இதனால் அவரது உடம்பில் ஒரு சில மாற்றம் ஏற்பட்டு, விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதாவது அடுத்தவர்களின் மூளையை கட்டுப்படுத்துவது, கைகளிலிருந்து மின்னல் சக்தி, வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி என பல சக்திகள் அவருக்கு கிடைக்கிறது.

கிராமத்தை காப்பாற்றினாரா : மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஆதியை அவரது அக்கா அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று விடுகிறார். அப்போது அவருக்கு சொந்த ஊருக்கு வரப்போகும் பெரிய ஆபத்து குறித்து அடிக்கடி அவருக்கு கனவுகள் வருகின்றன. இதனால் சொந்த ஊரை காப்பற்ற சிங்கப்பூரில் இருந்து வரும் ஆதி, கிராமத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
முதல் நாள் வசூல் : மலையாளத்தில் பேசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான 'மின்னல் முரளி' படத்தில் சில மாற்றங்களை செய்து சூப்பர்ஹீரோவாக ஹிப் ஹிப் ஆதியை களம் இறக்கி உள்ளார் இயக்குநர். ஆனால் மின்னல் முரளி படத்துடன் வீரன் படத்தை ஒப்பிடும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும், 3.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











