போகட்டும் போகட்டும் போ... பிறந்தநாளில் மியூசிக் ஆல்பம் வெளியிட்ட ஆதி

சென்னை : நடிகர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இன்றைய தினம் ஆதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் புதிய ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. துவக்கத்தில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கிய இவர் தற்போது நடிகராகவும் கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளராகவும் மாறி தனது படங்களை தயாரித்தும் வருகிறார். மற்ற தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார்.

ஹிப்ஹாப் தமிழன் ஆல்பம்

ஹிப்ஹாப் தமிழன் ஆல்பம்

கடந்த 2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் 'ஹிப்ஹாப் தமிழன்' ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு 'ஹிப்ஹாப்' எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை திங்க் மியூசிக்கிற்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான். இதையடுத்து ஹிப்ஹாப் என்பது ஆதியின் அடையாளமாக மாறியுள்ளது.

ஆம்பள படத்தில் அறிமுகம்

ஆம்பள படத்தில் அறிமுகம்

இந்த ஆல்பத்தின் மூலம் பிரபலமான ஆதி, தொடர்ந்து சுந்தர் சியின் ஆம்பள படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தப் படம் அவருக்கு சிறப்பான இடத்தை கொடுத்துள்ளது. அதுவரை ஆல்பம் பாடல்களின்மூலமே அறியப்பட்ட ஆதி, ஆம்பள படத்திற்கு பிறகு சிறப்பான இசையமைப்பாளராகவும் மாறினார்.

சிறப்பான நடிகர்

சிறப்பான நடிகர்

தொடர்ந்து நடிகனாகவும் தயாரிப்பாளராகவும் மாறி ஆதி கோலிவுட்டில் கலக்கி வருகிறார். இவரது நான் சிரித்தால், சிவக்குமாரின் சபரம், அன்பறிவு என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதி.

ஆல்பம் பாடல்கள் வெளியீடு

ஆல்பம் பாடல்கள் வெளியீடு

தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களையும் இவர் வெளியிட்டு வருகிறார். இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஆதி. இதையொட்டி நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தில் போகட்டும் போகட்டும் போ என்ற பாடலை திங்க் மியூசிக் சார்பில் உருவாக்கி வெளியிட்டுள்ளார். சிறப்பான காட்சி அமைப்புகளுடன் இந்தப் பாடல் காணப்படுகிறது.

தன்னம்பிக்கை வீடியோ

தன்னம்பிக்கை வீடியோ

மேலும் மனமொடிந்த நிலையில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த ஆல்பம் அமைந்துள்ளது. இந்தப் பாடலை எழுதி, பாடி, நடித்துள்ளார் ஆதி. சோகங்கள் போகட்டும் போ என்று நிம்மதியும் அளித்துள்ளார் ஆதி. அழகான பின்புலத்தில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

ஆதி பிறந்தநாள்

ஆதி பிறந்தநாள்

இன்றைய தினம் தனது பிறந்தநாளில் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ள ஆதி, இந்த பாடலுக்கு ஏற்றாற்போலவே தனது கேரியரையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவரது படங்கள், கேரியர் மற்றும் இசை உள்ளிட்ட அனைத்துமே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. அதையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X