காலையில எழுந்தா என்ன பண்றதுனே தெரியல.. தூங்கி தூங்கி எழுந்திருக்கிறேன்.. ஹிப்பாப் ஆதி !

சென்னை : படு பிஸியாக இருந்த ஹிப்ஹாப் ஆதி ஊரடங்கில் எப்படி பொழுது போகிறேன் என்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார் .

Recommended Video

HIP HOP THAMIZHA LIVE PERFORMANCE | NAAN SIRITHAL AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

பாடகர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என்று பல பன்முகத் தன்மைக் கொண்ட துடிப்பான இளைஞர் ஹிப்ஹாப் ஆதி. கொரோனாவால் உலகமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த 21 நாள் ஊரடங்கு அனைத்து தரப்பு மக்களையும் என்ன செய்வது என்பது கூட தெரியாத நிலைக்கு தள்ளி உள்ளது.

 Hiphop tamizha adhi has posted on Instagram that he is asleep

இந்த ஊரடங்கில் தனது பொழுதை எப்படி போக்குகிறேன் என்பதை ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நான் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன் ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இதனால் வேறுவழியின்றி மீண்டும் தூங்க சென்று விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இவ்வாறே ஊரடங்கில் நேரத்தை கழித்து வரும் உங்கள் நண்பர்களையும் டேக் செய்யுங்கள் என்று ஒரு புகைப்படத்துடன் இந்த பதிவை போட்டிருக்கிறார் .

ஹிப்ஹாப் தமிழா ஆதி ஊரடங்கினால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தனது அதிகபட்ச நேரத்தை வீட்டில் தூங்கிய படியே செலவிட்டு வருகிறார். மேலும் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆதி இணையத்தையும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார். இதில் இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிகமாக ஆக்டிவ்வாக இருக்கிறார்.

 Hiphop tamizha adhi has posted on Instagram that he is asleep

சமீபத்தில் ஆதி இசையமைத்து நடித்த நான் சிரித்தாள் படத்தில் 'பிரேக் அப் சாங்' என்று ஒரு பாடல் வரும். இந்த பாடலில் வரும் இசையை ரசிகர்கள் பல பொது விஷயங்களோடு சேர்த்து அல்லது மற்ற பட காட்சிகளுடன் கோர்த்து அதை வீடியோ பதிவாக போட்டு வருகின்றனர். இதை பார்த்த ஹிப்ஹாப் ஆதி அதில் சிறந்த சில வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி அந்த வீடியோக்களை உருவாக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் .

மேலும் ஹிப்ஹாப் தமிழா பற்றிய எந்த பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டாலும் அது ஆதிக்கு பிடித்துவிட்டால் அதை உடனே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றி விடுகிறார். இதில் பல மீம்கள், ஆதி பாடலுக்கு டிவி முன் ஆடும் குழந்தைகள் என்று பல்வேறு விஷயங்களும் அடங்கும் .

 Hiphop tamizha adhi has posted on Instagram that he is asleep

மேலும் தனது ரசிகர்களுக்காக குரான்டைன் நேரத்தில் ஒரு பாடலையும் கடந்த மாதம் வீட்டிலிருந்த படியே ஆதி இசையமைத்து யூடியூப்பில் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X