முதல்முறையாக இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி!
சென்னை : நான் சிரித்தால் படத்தில் வித்தியாசமான சிரிக்கும் நோயால் பாதிக்கப்பட்டு கோபம் வரும் போது சிரிக்கும் நபராக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி.
இப்பொழுது அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் நடித்து வர இதில் நெப்போலியன் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அன்பறிவு படத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவரே இயக்குகிறார்
ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை என்றாலும் இப்பொழுது அதிக ரசிகர்களால் விரும்பக்கூடிய நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் ஹிப்ஹாப் ஆதி சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒரு படத்தை இவரே இயக்குகிறார்.

மதுரையில் படப்பிடிப்பு
இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனராக பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கும் அறிமுக திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை கொண்டு இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. இதுவரை சிட்டி பாயாக ஆட்டம் போட்டு வந்த ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக கிராமத்து பையன் வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஆதிக்கு தாத்தாவாக
ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறை ஆண்களின் பிணைப்பை மிக கச்சிதமாகவும் காமெடி கலந்த சென்டிமென்ட் கட்சிகளுடனும் எடுத்துரைக்கும் வகையில் உருவாகிவரும் அன்பறிவு படத்தில் விதார்த் முக்கியமான ரோலில் நடிக்க நெப்போலியன் ஆதிக்கு தாத்தாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் செல்லப்படுகிறது. மேலும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த நடிகை காஷ்மீரா இதில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை வேடத்தில்
இதையடுத்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்து வரும் ஹிப்ஹாப் ஆதி இந்த படத்தை தானே இயக்கவும், இசை அமைக்கவும் செய்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிராமத்து களத்தில் முதல் முறையாக நடிக்கும் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் ஆதி நடிக்க உள்ள செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











