தல – தளபதியை வச்சு செஞ்ச ஹிப்ஹாப் தமிழா.. ஆனா இது ஜோக்கர் காப்பி என வச்சும் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஹிப்ஹாப் தமிழாவின் 'நான் சிரித்தால்' படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுந்தர்.சி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக தமிழ் படம் 2வில் நடித்த ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

கோமாளி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் காமெடி வில்லனாக கே.எஸ். ரவிக்குமார் புதிய கெட்டப்பில் கலக்கியுள்ளார்.

டிரைலர் எப்படி இருக்கு?

நான் சிரித்தால் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி இந்த படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்வது போன்ற நோய் பாதிப்பு இருக்கிறது. அதனால், அவர் படும் கஷ்டங்களை காமெடி கலகலப்பாக எடுத்துள்ளார் ராணா.

ஆபாச வசனம்

ஆபாச வசனம்

டிரைலரில் ஹீரோவை பார்த்து நாயகி ஐஸ்வர்யா மேனன் போடுவியா மாட்டியான்னு கேட்பது, அதே இரட்டை அர்த்த வசனத்தை டிரைலர் முழுக்க பலரும் ரிப்பீட் செய்வது ஆபாசமாக உள்ளது.

மெர்சல் கலாய்

தியேட்டரில் மெர்சல் படத்தின் சீரியஸான காட்சியில் ஹிப்ஹாப் ஆதி சிரிப்பதும் தியேட்டரே ரவுண்டு கட்டி அவரை அடிப்பது போன்ற காட்சியை வைத்து தளபதி ரசிகர்களை கலாய்த்துள்ளார்.

விஸ்வாசத்தையும் விடவில்லை

தளபதியை கலாய்த்து விட்டார் என தளபடி ரசிகர்கள் காண்டாகி கொண்டிருக்கும் போது அவர்களுக்கு கிளைமேக்ஸில் ஆறுதலாக தல அஜித்தின் விஸ்வாசம் கண்ணான கண்ணே பாடல் காட்சியையும் சிரித்து கலாய்த்துள்ளார்.

ஜோக்கர் காப்பி

ஜோக்கர் காப்பி

எல்லாம் சரி, ஆனால், திரைக்கதை அப்படியே ஜோக்கர் படத்தின் காப்பியாக அல்லவா இருக்கிறது என தல - தளபதி ரசிகர்கள் கூட்டாக சேர்ந்து ஹிப் ஹாப் தமிழாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

காமெடி ஜோக்கர்

காமெடி ஜோக்கர்

ஜோக்கர் படத்திலும் ஹீரோவுக்கு இதுபோன்று துன்பம் வரும் நேரத்தில் சிரிக்கும் பழக்கம் இருக்கும் ஆனால், அது அவனை வில்லனாக மாற்றிவிடும். ஹிப் ஹாப் தமிழாவின் இந்த நான் சிரித்தால் படம் காமெடி ஜோக்கராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

காமெடி கலவையாக வந்துள்ள நான் சிரித்தால் திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. காதலர் தினத்தன்று காதலி செட்டாகாத சிங்கிள்ஸ் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க இந்த படத்தை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X