பாகுபலிக்கு ஒரு கட்டப்பா... அதப்போல தான் எங்க சித்தப்பா... அடுத்த பாடலை வெளியிட்ட ஹிப்ஹாப் தமிழா

சென்னை : நடிகர், இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை கொண்டவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

அவர் தற்போது சிவகுமாரின் சபதம் படத்தின் டைரக்டராகவும் நடிகராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறப்பான மீசையை முறுக்கு படம்

சிறப்பான மீசையை முறுக்கு படம்

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டைரக்டர் என பன்முகத் திறமை காட்டி வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. மீசையை முறுக்கு படத்தின்மூலம் இவர் இயக்குநராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டார். அந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது.

சிவகுமாரின் சபதம் படம்

சிவகுமாரின் சபதம் படம்

தொடர்ந்து நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் மற்றவர் டைரக்ஷனில் நடித்த ஆதி, தற்போது மீண்டும் இயக்குநராக சிவகுமாரின் சபதம் படத்தில் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்திலும் வழக்கம் போல காமெடியை அவர் களமாக எடுத்துள்ளார். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Recommended Video

நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணமான நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
ரசிகர்களிடம் வரவேற்பு

ரசிகர்களிடம் வரவேற்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்டார் ஆதி. இந்த பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அரைத்த மாவையே அவர் அரைப்பதாக பலர் கமெண்ட் செய்திருந்தனர். ஆயினும் அந்த பாடல் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

லிரிக் வீடியோ

லிரிக் வீடியோ

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளை ஹிப்ஹாப் தமிழா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாகுபலிக்கு ஒரு கட்டப்பா, அதப்போலதான் எங்க சித்தப்பா என்ற அந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் இண்டீ ரெபல்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த படத்தை ஹிப்ஹாப் தமிழாவும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X