ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம்..வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை : இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ராணா இயக்கிய நான் சிரித்தால் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹிப்ஹாப் ஆதி.

ஊர்வசி, நெப்போலியன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் முக்கியமான வேடத்தில் நடிக்கும் அன்பறிவு படத்தில் கிராமத்து பையனாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தினை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு சபதமேற்று இருக்கும் ஹிப் ஹாப் ஆதிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகராகவும் இயக்குனராகவும்

நடிகராகவும் இயக்குனராகவும்

இளம் ரசிகர்களால் அதிகமாக ஈர்க்கப்படும் நடிகர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. ஹிப் பாப் இசையின் மூலம் பல ஆண்டுகளாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இவர் இப்பொழுது நடிப்பின் மூலம் அனைவரையும் அசத்தி வருகிறார். மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமான இவருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

அதைத் தொடர்ந்து பிரபாகரன் இயக்கிய நட்பே துணை படத்தில் ஹாக்கி போட்டியையும் அதில் நடக்கும் அரசியலையும் சுவாரசியமாக எடுத்துக்காட்டி இருந்த இந்த படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. மாயவன்,மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தொடர்ந்து நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்த ஹிப்ஹாப் தமிழா சற்று வித்தியாசமாக தேர்ந்தெடுத்த கதை நான் சிரித்தால்.

சுமாரான வெற்றியை

சுமாரான வெற்றியை

கோபம் வரும்போது சிரிப்பு வரும் நோய் உள்ளவனை பற்றிய படமாக உருவாகி இருந்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

கலந்து கொண்டுள்ள வீடியோவையும்

கலந்து கொண்டுள்ள வீடியோவையும்

நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஹிப்ஹாப் ஆதி ஏ1 எக்ஸ்பிரஸ் மற்றும் ஆலம்பனா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் ஏ1 எக்ஸ்பிரஸ் நட்பே துணையின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் அட்லியின் உதவியாளர் அஸ்வின் இயக்கும் அன்பறிவு படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த ஹிப்ஹாப் ஆதி அதில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் இதில் பக்கா கிராமத்து பையனாக நடித்து வருகிறார்.
இதுவரை சிட்டி கதைகளில் நடித்து அசத்தி வந்த ஹிப்ஹாப் ஆதி இது முதல் வில்லேஜ் படமாக அமைந்திருக்கிறது. மேலும் இதில் நெப்போலியன் மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி தான் இயக்கி நடித்து தயாரிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் இப்பொழுது வெளியிட்டுள்ளார். "சிவகுமாரின் சபதம்" என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு இந்த படத்தை இவர் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து சிவகுமாரின் சபதம் படத்தை தயாரிக்கவும் இருக்கிறார்.

ஆக்ஷன் படமாக

ஆக்ஷன் படமாக

முறுக்கு மீசையுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அக்ரஹாரம் பேக்ரவுண்ட் உடன் மிரட்டலாக ஹிப்ஹாப் ஆதி நின்றுகொண்டிருக்க சிவகுமாரின் சபதம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இவரே இசையும் அமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X