அவர் உருக, இவர் மருக: ட்விட்டரில் விவேக், ஹிப்ஹாப் தமிழா ஒரே பாசமழை
சென்னை: ட்விட்டரில் ஹிப்ஹாப் தமிழா உருக, விவேக் மருக, அடடா அடடா ஒரே ஃபீலிங்ஸ் தான்.
மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தந்தையாக நடித்திருந்தார் விவேக். இந்நிலையில் விவேக்கின் பிரபலமான வசனத்தை பாடலாக்கியுள்ளார் ஆதி.

அந்த பாடலுக்கு இன்ஸ்பிரேஷன் தனது ரீல் தந்தை என்று தெரிவித்துள்ளார் ஆதி. இன்ஸ்பிரேஷனுக்கு நன்றி தந்தையே என்று ஆதி வீடியோவுடன் ட்வீட்டியிருந்தார்.
ஆதியின் ட்வீட்டை பார்த்த விவேக் இன்னும் நல்லா வருவே மகனே!!@hiphoptamizha என்று வாழ்த்தியுள்ளார். மீசைய முறுக்கு படத்தில் விவேக் கெத்தான தந்தையாக நடித்ததை யாராலும் மறக்க முடியாது.
ஹிப்ஹாப் தமிழாவின் வீடியோவை பார்த்து பாராட்டுபவர்கள் பாராட்டியுள்ளனர், கலாய்ப்பவர்கள் கலாய்த்துள்ளனர். அதில் ஒரு கலாய் இது.
Comments


Click it and Unblock the Notifications