இரண்டு இசையமைப்பாளர்களுடன் இணைந்த ஹிப் ஹாப் ஆதி... அன்பறிவு படம் குறித்து குஷி!

சென்னை :நடிகர் ஹிப் ஹாப் ஆதி லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அன்பறிவு.

இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஜனவரி 7ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தப் படத்திற்காக இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி

நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது அன்பறிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நேரடி ஓடிடி ரிலீசாக வரும் 7ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீசாக உள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு

படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமாக படம் அனைவரது இல்லங்களிலும் உலா வர உள்ளது. படம் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீசின்போதே ஓடிடியில் வெளியாக உள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஆதி இசை

ஆதி இசை

தனது படங்களுக்கு தானே இசையமைப்பதை வழக்கமாக கொண்டுள்ள ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அவர் குஷியாக வேலை செய்ய மேலும் ஒரு காரணம் உள்ளது. இந்த காரணம் அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர்கள்

முன்னணி இசையமைப்பாளர்கள்

படத்தில் இரண்டு பாடல்களுக்கு முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளார். ஆதி இசையில் அவர்கள் இருவரும் பாடல்களை பாடியுள்ளது ஆதிக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை நாயகிகள்

இரட்டை நாயகிகள்

படத்தில் யுவன் அரக்கியே என்ற பாடலை பாடியுள்ளார். இதேபோல சந்தோஷ் நாராயணன், ரெடி ஸ்டெடி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த இரு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ஷிவானி ராஜசேகர், காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மேலும் நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், தீனா, சரத் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் சிறப்பாக அமைந்திருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X