குத்துபோட தயாராகுங்க... ஹிப்ஹாப் தமிழா ஆதி வெளியிட்ட முதல் வீடியோ பாடல்
சென்னை : நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம் சிவகுமாரின் சபதம்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் தற்போது படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதியின் முந்தைய படங்களின் பாடல்களை நினைவுப்படுத்தினாலும் குத்துப்பாட்டு ரக பாடல்களை விரும்புபவர்களுக்கு இது சிறப்பான பாடலாகவே அமையும்.

மீண்டும் இயக்குநர்
மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை நாயகனாகவும் நிலைநிறுத்தியுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சிவக்குமாரின் சபதம். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின்மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஆதி.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைக்கவும் செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தை ஆதியும் இணைந்து தயாரித்துள்ளார்.

முதல் வீடியோ பாடல் வெளியீடு
இந்த படம் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் படத்தில் சிவக்குமாரின் பொண்டாட்டி எனத் துவங்கும் முதல் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் முதல் சிங்கிளை வெளியிட்டுள்ள ஆதி, டான்ஸ் ஆட தயாராகுங்கள் என்று கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

சிறப்பான குத்துப்பாடல்
இந்த பாடலில் ஹீரோயினை துரத்தி பாடல் பாடுகிறார் ஆதி. நல்ல குத்து நம்பராக வந்துள்ள இந்த பாடல் அவரது முந்தைய படங்களை நினைவுப்படுததும் வகையில் அமைந்திருந்தாலும் அவரது இசை மற்றும் குத்து பாடல்களின் ரசிகர்களுக்கு இந்த பாடல் கண்டிப்பாக பிடித்தமானதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











