பாகுபலிக்கு கட்டப்பா... அதபோல என் சித்தப்பா... ஹிப்ஹாப் தமிழாவிற்கு கைகொடுப்பாரா சித்தப்பா?

சென்னை : நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவகுமாரின் சபதம்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆயினும் ரசிகர்கள் கலாய்க்கவும் தவறவில்லை.

இந்நிலையில் வரும் 12ம்தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவகுமாரின் சபதம் படம்

சிவகுமாரின் சபதம் படம்

நடிப்பு, இசை, இயக்கம், தயாரிப்பு என பன்முகத் திறமையை காட்டி வருகிறார் ஹிப்ஹாப் தமிழா. இவரது இயக்கத்தில் மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சிவக்குமாரின் சபதம் படம் உருவாகியுள்ளது. மீசையை முறுக்கு படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது இந்த படத்தையும் வெற்றிப் படமாக்க ஆதி மிகுந்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

மிகுந்த வரவேற்பு

மிகுந்த வரவேற்பு

சத்யஜோதி பிலிம்ஸ், இண்டீ ரெபல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆதியும் சிவக்குமாரின் சபதம் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. வழக்கம் போல ஆதியின் அதிரடி இசையில் வெளிவந்த இந்த பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கூடவே பாடல் முந்தைய படத்தின் பாடல்களை நினைவுப்படுத்துவதாக கலாய்க்கவும் ரசிகர்கள் தவறவில்லை.

ஹிப்ஹாப் அப்டேட்

ஹிப்ஹாப் அப்டேட்

ஆயினும் தொடர்ந்து யூடியூபில் முதலிடத்தில் இந்த பாடல் இருந்தது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி தீர்த்து விட்டார்கள். கடந்த 2ம் தேதி வெளியான இந்த பாடலை இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை ஆதி வெளியிட்டுள்ளார்.

அடுத்த சிங்கிள்

அடுத்த சிங்கிள்

வரும் 12ம் தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையொட்டி பாகுபலி படத்தை நினைவுப்படுத்தும் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். பாகுபலிக்கு ஒரு கட்டப்பா.. அதபோல தான் என் சித்தப்பா என்ற அந்த பாடலும் முதல் பாடலை போல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஹிப்ஹாப் தமிழா கவனம்

ஹிப்ஹாப் தமிழா கவனம்

ஆயினும் ரசிகர்களின் கலாய்ப்பையும் நினைவில் வைத்தே இந்த பாடலை ஆதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடல் அவரது பழைய படத்தின் பாடல்களை நினைவுப்படுத்துவதை போல தற்போது வெளியாகவுள்ள இந்த பாடல் அமையாது என்று எதிர்பார்க்கலாம்.

Recommended Video

HIP HOP THAMIZHA LIVE PERFORMANCE | NAAN SIRITHAL AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

எப்போதும் கூட்டமாக ஹீரோயினை துரத்தும் அரைத்த மாவை அரைப்பதை விட்டுவிட்டு வித்தியாசமான முயற்சிகளை ஹிப்ஹாப் தமிழா மேற்கொண்டால் அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் அது சிறப்பாக அமையும். அவரது இசைக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் இத்தகைய விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X