ஒரு பெண்ணுக்காக என் வாழ்க்கையை நாசமாக்கிட்டான்.. ராஜமெளலி மீது பகீர் குற்றச்சாட்டு வைத்த நண்பன்!

ஹைதராபாத்: பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களின் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்டம் என்றால் ராஜமெளலிதான். ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்று தென்னிந்திய சினிமாவையே புருவம் உயர வைத்தது. எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த அவர் மீது தற்போது அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அளித்துள்ள குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இன்ஸ்பிரேஷன்: இந்திய சினிமாவின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பாகுபலி 1,2 படங்களின் மூலம் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவர் படம் என்றால் ரசிகர்களுக்கு விருந்துதான். நடிகரின் படத்திற்கு மட்டும் அல்ல இயக்குநர்களின் படத்திற்கும் கட்அவுட் வைக்கும் காலத்தை மாற்றியவர் ராஜமெளலி. இந்தியா முழுக்க இவரது படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஸ்பாபுவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் வரலாற்று புனைவு கதை என கூறப்படுகிறது.

SS Rajamouli Srinivasa rao Love

ரஜினிக்காக காத்திருப்பு: இவர் கதை சொல்லும் விதம் கேட்பவர்களை பிரம்மிக்கை வைக்கும். ரஜினிகாந்தை வைத்து இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. பாகுபலியை பார்த்து மிரண்டு போன ரஜினி ராஜமெளலியை வாழ்த்தி பேசினார். ரஜினியை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு காட்சியை புரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருப்பார் ரஜினி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் ஆக இருந்தது.

பாராட்டு: ராஜமெளலியின் படங்களில் நடிக்கும் நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், ராணா என அனைவருடனும் நட்புடன் பழகக் கூடியவர். ராஜமெளலி என்றால் பர்பெக்ட். இவரது தந்தை கதை எழுதி இயக்கி நான் ஈ திரைப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. ஒரு ஈ பழிவாங்கினால் எப்படி இருக்கும் என்பதை கேட்க சாதாரணமாக இருந்தாலும், அதை காட்சியில் நகர்த்திய விதம் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுத்தும் மிகப்பெரிய பங்கு வகித்தன. விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மிக்க வைத்தன. நிஜ ஈ வந்தாலும் நம்ப முடியாத அளவிற்கு பிரமாதப்படுத்தியிருப்பார் ராஜமெளலி.

ராஜமெளலியின் நண்பர் புகார்: ஜாலி பாயாக இருக்கும் ராஜமெளலி மீது அவரது நண்பர் சீனிவாச ராவ் பரபரப்பான குற்றச்சாட்டு வைத்திருப்பது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். இதற்கெல்லாம் காரணம் காதல் தான். ஒரு பெண்ணால் வந்த பிரச்னை என்றும் கூறியுள்ளா். அவர் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார் என்றும் புலம்புகிறார்.

SS Rajamouli Srinivasa rao Love

34 ஆண்டு நட்பு: ராஜமெளலியை எனக்கு 34 வருடங்களாக தெரியும். அவர் எனக்கு நெருங்கிய நண்பரும் கூட, நான் ஒரு பெண்ணை சின்சியராக காதலித்து வந்தேன். என் காதல் கதை ஆர்யா 2 படத்தை போன்று முக்கோண காதல் கதை என்று குறிப்பிட்டுள்ளார். தற்கொலை வீடியோவில், பல ஆதாரங்களை அவர் தெரிவித்துள்ளார். அதில், அந்த பெண்ணை விட்டு கொடுக்குமாறு என்னிடம் ராஜமெளலி கூறினார். இந்த சம்பவம் சாந்தி நிவாசம் சீரியலுக்கு முன்பு நடந்தது.

நாசமாக்கிட்டான்: ஆரம்பக் காலகட்டத்தில் எனது சினிமா வாழ்க்கை கெட்டு போகக் கூடாது என்பதற்காக காதலியை விட்டுகொடுத்தேன் என சீனிவாசராவ் தெரிவித்துள்ளார். தற்போது என் வாழ்க்கையை ராஜமெளலி நாசமாக்கிட்டான். அவனால் என் சினிமா மட்டும் அல்ல, என் காதலியும் என்னை விட்டு போய்விட்டாள். ராஜமெளலியால் என் வாழ்க்கையே போச்சு என கண்ணீர் விட்டு புலம்புகிறார் சீனிவாசராவ். ஆனால், இதுவரை ராஜமெளலி தரப்பில் எந்தவித மறுப்போ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜமெளலியா இப்படி செய்தார் என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

More from Filmibeat

Read more about: ss rajamouli srinivasa rao love
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X