"அந்த சீன்ல நடிக்கும்போது அவர் கை நடுங்க ஆரம்பிச்சிடும்" - அமலாபால்

By Vignesh Selvaraj

Recommended Video

'அந்த சீன்ல நடிக்கும்போது அவர் கை நடுங்க ஆரம்பிச்சிடும்' - அமலாபால்- வீடியோ

சென்னை : அமலா பால், பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'திருட்டு பயலே 2'. சுசி கணேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதன் இரண்டாம் பாகமான 'திருட்டு பயலே -2' படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால் நிகழும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை எனச் சொல்லப்படுகிறது.

போலீஸாக பாபி சிம்ஹா

போலீஸாக பாபி சிம்ஹா

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா போலீசாக நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பதாகவும், அதன்மூலம் அவர்களிடம் மிரட்டி பணம் சம்பாதிப்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஐ வாட்ஸ்அப் ஆடியோ

எஸ்.ஐ வாட்ஸ்அப் ஆடியோ

சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிய ஆபாச ஆடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு எஸ்.ஐ பேசுவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதே மாதிரியான காட்சி இந்தப் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

கை நடுங்கும்

கை நடுங்கும்

ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறித்து அமலாபாலிடம் கேட்டதற்கு, "அந்த காட்சிகளில் நடிக்கும்போது பாபி சிம்ஹாவுக்கு கை நடுங்க ஆரம்பித்து விடும். ஆனால், நான் தயக்கமின்றி நடித்தேன்" எனக் கூறியுள்ளார்.

கவர்ச்சி காட்சிகளில் அமலாபால்

கவர்ச்சி காட்சிகளில் அமலாபால்

"நான் கவர்ச்சி காட்டியதால் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை" என 'திருட்டு பயலே 2' படத்தில் கவர்ச்சியாக நடித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமலாபால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X