Miss Portugal: உலகத்துலயே அழகான பொண்ணு ஒரு ஆணா?.. மிஸ் போர்ச்சுகல் பட்டம் வென்ற திருநங்கை!
லிஸ்பான்: Miss Portugal Marina Machete - போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற மிஸ் போர்ச்சுகல் பட்டத்தை முதன்முறையாக திருநங்கை ஒருவர் வென்றிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஆரம்பத்தில் மாடலிங் துறைக்கு வரவே ஏகப்பட்ட போட்டிகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்தேன் என்றும் இந்த தருணம் தனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக மிஸ் போர்ச்சுகல் பட்டம் வென்ற 28 வயதான மரினா மச்சேட் (Marina Machete) தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சாதிக்கும் திருநங்கைகள்: திருநங்கைகள் தொடர்ந்து பல துறைகளிலும் தங்களாலும் சாதிக்க முடியும் என சாதித்துக் காட்டி வருகின்றனர். சினிமா, மீடியா, கல்வி, அரசியல் என அசத்தி வரும் அவர்கள் மாடலிங் துறையிலும் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து, ஷிவின் கணேசன் இருவருமே மாடலிங் உலகில் கலக்கி வரும் திருநங்கைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் போர்ச்சுகல்: விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வரும் 28 வயதான மரினா மச்சேட் கடந்த வியாழக்கிழமை போர்பா நகரில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போர்ச்சுகல் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளது ஒட்டுமொத்த திருநங்கைகள் சமூகத்திற்கே மிகப்பெரிய பெருமையாக மாறி உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக இது தனது பல ஆண்டு கனவு என்றும் முதல் முறையாக போர்ச்சுகலில் நடக்கும் அழகிப் போட்டியில் பங்கேற்கும் திருநங்கையாக நான் தேர்வு செய்யப்பட்டதற்கே சந்தோஷம் என பதிவிட்டு சென்றிருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் பட்டமே இவருக்கு கிடைத்திருப்பது அவருக்கு பேரின்பத்தை அளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரிக்கி கொல்லே எனும் டச் நாட்டை சேர்ந்தவர் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 2018ல் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் டைட்டிலுக்கு போட்டிப் போட்ட முதல் திருநங்கை போட்டியாளரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஏஞ்சலா ஸ்பான்ஸை தொடர்ந்து சர்வதேச அளவில் சாதித்துக் காட்டிய திருநங்கைகளாக மரினா மச்செட் மற்றும் ரிக்கி கொல்லே மாறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











