வரலாறு படைத்த வாலன்டினா சம்பாயோ.. பிரபல இதழின் அட்டைப் பட அழகியாக தேர்வான முதல் திருநங்கை!

பிரேசில்: பிரபல ஸ்போர்ட்ஸ் இதழின் ஸ்விம் சூட் மாடலாக முதல் முறையாக ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

Super Deluxe Best Film Award | Kerala critics choice award | Thiagarajan Kumararaja

பொதுவாக அட்டைப் படங்களை முன்னணி நடிகைகளே அலங்கரித்து வரும் நிலையில், வரலாற்றில் முதன்முறையாக Valentina Sampaio பல பிரபல இதழ்களின் அட்டைப் படங்களை அலங்கரித்து சாதனை படைத்து வருகிறார்.

பிரேசில் அழகியான இவர், திருநங்கைகள் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதையும் உருக்கமாக கூறியுள்ளார்.

பெண்களே பொறாமைப்படும் பேரழகு

பெண்களே பொறாமைப்படும் பேரழகு

23 வயதே ஆகும் இந்த பிரேசில் அழகியை பார்த்து, பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அவரது அழகு மெருகேறி இருக்கிறது. 1996ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிறந்த இவர், முன்னணி மாடல் அழகியாக வலம் வருகிறார். பிரவுன் நிற கூந்தலுடனும் பச்சைக் கண்களுடனும் சுமார் 1.77 மீட்டர் உயரம் கொண்ட தங்க ரதமாக மின்னுகிறார்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

மாடலிங் உலகில் தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் கொடிகட்டி பறந்து வரும் வாலன்டினா சம்பாயோ, பிரபல மாத இதழான Sports Illustrated அட்டைப் படத்தில் இடம்பெற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். பிகினி உடையில், அவர் கொடுத்திருக்கும் போஸ், உலகளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. வரும் ஜூலை 21ம் தேதி அந்த இதழ் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வோக் இதழிலும்

வோக் இதழிலும்

இதற்கு முன்னதாக பிரபல லைஃப்ஸ்டைல் மேகஸினான Vogue இதழின் Vogue Paris, Vogue Brazil, Vogue Germany இதழ்களின் அட்டைப் படங்களையும் அலங்கரித்த முதல் திருநங்கை என்ற பெருமையை இவர் பெற்று அசத்தி உள்ளார். மேலும், மார்க் ஜேக்கப்ஸ், டியோர் மற்றும் H&M ஃபேஷன் பிராண்டுகளுக்கும் இவர் மாடலாக இருந்து வருகிறார்.

திருநங்கைகளுக்கு எதிராக

திருநங்கைகளுக்கு எதிராக

பள்ளிகளில் இருந்தே மூன்றாம் பாலினத்தவருக்கான பிரச்சனைகள், இந்த சமூகத்தில் தொடங்கி விடுகிறது. கிண்டல், கேலி, அவமானம், மன வருத்தம் என பல விஷயங்களை தாண்டித் தான் வாழவே முடிகிறது. உலகிலேயே அழகான நாடு என பார்க்கப்படுகிற பிரேசில் நாட்டிலும், திருநங்கைகள் தினம் தினம் நசுக்கப்படுகின்றனர் என தனது மன வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார் வாலன்டினா சம்பாயோ

விக்டோரியா சீக்ரெட் மாடல்

விக்டோரியா சீக்ரெட் மாடல்

மேலும், வாலன்டினா சம்பாயோவின் மாடலிங் உலக பயணத்தில் அவருக்கு மணிமகுடம் சூடுவது போல, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளையும் மனிதர்களாகவே பார்க்க இந்த உலகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இத்தனை சாதனைகளையும் புரிந்த சாம்பையோவின் ஆதங்கமாக இருப்பது சமூகம் எப்போது மாறும் என்கிற கேள்வியையே எழுப்புகிறது.

More from Filmibeat

Read more about: transgender model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X