For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை என்னை வசீகரித்தது... குழந்தை ரசிகர்களின் அன்பில் மயக்கிய பாப் பாடகி ஹிதா

|

சென்னை: பாப் சிங்கர் ஹிதா சென்னை ரசிகர்கள் அன்பால் கட்டிப்போட்டுவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். கர்நாடகத்தில் பிறந்து கலிபோர்னியாவில் தனது வசீகர குரலால் கட்டிப்போட்டுள்ள பாப் பாடகி ஹிதாவை சென்னை ரசிகர்கள் அன்பால் கட்டிப்போட்டுவிட்டனர்.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிதா பாட ஆரம்பித்த முதல் பாடலில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருந்ததோடு, கடைசியாக பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போட தொடங்கியது ஆச்சரியமான விசயம்.

Hitha entertained Tamil fans with her magnetic voice

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம். 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம்.

இவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்.

பிக்பாஸ் டைட்டில வின் பண்ண போறது யார்? நடிகர் போஸ் வெங்கட் சொல்றது கேளுங்க!

அதை ஏற்று கொண்டு இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரவுண்டில் தனது நிகழ்ச்சியை இன்ஸ்பையர்டு பை ஹிதா (INSPIRED BY HITHA) என்ற பெயரில் நடத்தினார்.

Hitha entertained Tamil fans with her magnetic voice

இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்று பெரிய சந்தேகமே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மேலும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அந்த இசை நிகழ்ச்சியை காண கூடி இருந்தனர். தமிழ்நாட்டிற்கு ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு மயங்கினர்.

Hitha entertained Tamil fans with her magnetic voice

மேலும், இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருந்தது குறிபபிடத்தக்கது. கடைசியாக பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போட தொடங்கிவிட்டனர்.

இவரின் நிகழ்ச்சி முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று கிட்டத்தட்ட 10 நிமிடம் கைதட்டி கொண்டிருந்தது, பாப் இசை கலைஞர் ஹிதாவை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சி பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிதா, ஐ லவ் யூ சென்னை என்றும் குழந்தைகளின் நடனமும் அன்பும் என்னை கட்டிப்போட்டு விட்டது என்று பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் ஹிதாவின் மயக்கும் குரலை தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கேட்டு ரசிக்கலாம்.

English summary
It is noteworthy that the fans were cheering until Pop Singer Hitha started singing. Surprisingly, the children started playing the last 4 songs.Some fun moments and Dancing with kids made my day highly entertained in Chennai! I never expected so much love from kids.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more