சீட்டுக் கம்பெனி மோசடிகளை தோலுரிக்கும் ஒகேனக்கல்!
சீட்டுக் கம்பெனி மோசடிகளைச் சொல்வதற்காகவே ஒரு படம் தயாராகிறது... தலைப்பு - ஒகேனக்கல்.
எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, பிடிஎஸ் திருப்பதி மூவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜோதி தத்தா - ஸ்ராவியா
கதாநாயகியாக முன்பையை சேர்ந்த ஜோதி தத்தா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார்.

நட்சத்திர கூட்டம்
முக்கிய வேடத்தில் பிடிஎஸ் திருப்பதி நடிக்கிறார். உமா பத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், காதல் தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருண்மணி முத்துகாளை, கிரேன் மனோகர், பிளாக்பாண்டி, காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் என பெரிய நடிகர் கூட்டமே படத்தில் உள்ளது.

எம் ஆர் மூர்த்தி
பிஜி வெற்றி ஒளிப்பதிவு செய்ய, சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் எம்.ஆர்.மூர்த்தி.

சீட்டுக் கம்பெனி மோசடி
படம் குறித்து மூர்த்தி கூறுகையில், "ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டுகம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் கதை. இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம்.

ஓகேனக்கல்லில்
நான் ஏற்கனேவே கன்னடத்தில் மூன்று படங்களை இயக்கி இருக்கிறேன்.படத்தின் பெரும் பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











