ஆஞ்சநேயருக்கு நன்றி.. அந்த உணர்வை விவரிக்க முடியாது.. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தம்பி உருக்கம்!

By

பெங்களூரு: என் அண்ணன் குழந்தையை கையில் வைத்திருப்பது அண்ணனுடன் இருக்கும் உணர்வை தருகிறது என்று நடிகர் துருவா சார்ஜா தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா, சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்திய சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

4 மாத கர்ப்பம்

4 மாத கர்ப்பம்

அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மறைந்தபோது அவர் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பமாக இருந்தார். அவர் தமிழில், காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அழகான ஆண்குழந்தை

அழகான ஆண்குழந்தை

மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ள மேக்னா ராஜுக்கு நேற்று அழகான ஆண்குழந்தை பிறந்தது. மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்துவிட்டதாக ரசிகர்களும் உறவினர்களும் கூறி வருகின்றனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மேக்னா ராஜுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆஞ்சநேயருக்கு நன்றி

ஆஞ்சநேயருக்கு நன்றி

இந்நிலையில் மருத்துவமனையில் குழந்தையை, சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாயின. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துருவா சார்ஜா, மேக்னாவும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். இதற்காக ஆஞ்சநேயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாலி உரையாடல்

ஜாலி உரையாடல்

என் அண்ணன் குழந்தையை கையில் வைத்திருப்பது, என் அண்ணனே என்னுடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. அதை விவரிக்க முடியாது என்றார். இந்த கோடை தொடங்கும் போது, தனக்கும் அண்ணன் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் நடந்த ஜாலியான உரையாடலையும் அவர் நினைவு கூர்ந்தார்.

உங்களைப் போலவே

உங்களைப் போலவே

'விளையாட்டுத்தனமாக அப்போது அண்ணனிடம் கேட்டேன், அப்பாவாக போகிறீர்கள். உங்களைப் போலவே, ஒரு மகன் பிறந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். அவர் ஸ்கூல் படிக்கும் போது, நிறைய புகார்கள் வரும் ஆசிரியர்களிடம் இருந்து. எங்கள் பெற்றோர் அடிக்கடி பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால் அப்படி கேட்டேன்.

மகன் பிறப்பான்

மகன் பிறப்பான்

அவர் சொன்னார், நானும் அந்த மாதிரி நிறைய புகார்களை கண்டிப்பா எதிர்கொள்வேன் என்று. இவ்வாறு நடிகர் துருவா சார்ஜா தெரிவித்தார். எப்படியோ, மகன் பிறப்பான் என்ற என் அண்ணன் சிரஞ்சீவி சார்ஜாவின் கனவு, நனவாகிவிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X