மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...அமிதாப் வீட்டில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து
மும்பை : உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதலின்படி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் மும்பையில் ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் குடும்பத்தை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.
அமிதாப் வீட்டில் ஆண்டு தோறும், ஜல்சா என்ற பெயரில் ஹோலி பார்ட்டி நடைபெறுவது வழக்கம். 2020 ஐ போல் இந்த ஆண்டும் கொரோனா பரவலால் அமிதாப் வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஆர்கே ஸ்டூடியோசில் முன்னணி நடிகர்களான ராஜ் கபூர், ஷம்மி கபூர், ஜித்தேந்திரா, சத்ருஹன் சின்கா உள்ளிட்டோருடன் ஹோலி கொண்டாடிய அரிய ஃபோட்டோக்களை மட்டும் அமிதாப் பகிர்ந்திருந்தார்.
தனது இளம் வயதில் தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ஃபோட்டோக்களையும் அமிதாப் பகிர்ந்திருந்தார். அந்த ஃபோட்டக்களுடன் ஹோலி வாழ்த்துக்களை கூறி இருந்தார். ஆர்கே ஸ்டூடியோசை போன்று தனது வீட்டிலும் பிரபலங்கள் பலரை அழைத்து அமிதாப் குடும்பத்தினர் ஹோலி பார்ட்டி கொடுப்பது வழக்கம்.


Click it and Unblock the Notifications