»   »  மாமா ரஜினிக்கு கிடைக்காத பெருமை மாப்ள தனுஷுக்கு கிடைக்குமா?

மாமா ரஜினிக்கு கிடைக்காத பெருமை மாப்ள தனுஷுக்கு கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் ஹாலிவுட் நடிகர் அல் பசினோவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது தான் இயக்கி வரும் பவர் பாண்டி படத்தில் பிசியாக உள்ளார். படத்தில் இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கிறார். தனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

கொடி படத்தை தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய உள்ளார் தனுஷ்.

கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ்

தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான பகுதியை வெளிநாட்டில் படமாக்குகிறார்கள்.

அல் பசினோ

அல் பசினோ

காட் ஃபாதர் பட புகழ் ஹாலிவுட் நடிகரான அல் பசினோவை தனுஷின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அல் பசினோ இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மார்கன் ஃப்ரீமேன்

மார்கன் ஃப்ரீமேன்

முன்னதாக பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காததை அடுத்து அல் பசினோவை அணுகியுள்ளார்களாம்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் படத்தின் படப்பிடிப்பின் பெரும்பகுதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடக்குமாம். முன்னதாக ஷங்கர் தனது 2.0 படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கரை நடிக்க வைக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Karthik Subbaraj is in talks with Hollywood star Al Pacino for an important role in his upcoming movie starring Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil