ரஜினி கசினாவோ, நயன் அங்கிளாவோ நடிக்கிறேனே: முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்

By Siva

Recommended Video

Actress Nayanthara: நயன்தாராவை ஏமாற்றுவாரா ஏ.ஆர். முருகதாஸ்- வீடியோ

சென்னை:தர்பார் படத்தில் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டியூக் ஏ. ஆர். முருகதாஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Hollywood actor Bill Duke likes to act in Darbar

ஒரு ரஜினி தாதாவாகவும், மற்றொரு ரஜினி போலீஸ் உயர் அதிகாரியாகவும் நடிப்பதாக தகவல் வெளியானது. போலீஸ் ரஜினிக்கு தான் நயன்தாரா ஜோடி என்றும் கூறப்படுகிறது. கதை குறித்து முருகதாஸ் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கரின் கமாண்டோ, ப்ரிடேட்டர், எக்ஸ் மென் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த பில் டியூக் தமிழ் ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

அவர் தர்பார் படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கோரி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் பில் டியூக் முருகதாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதை பார்த்த ரஜினி ரசிகர்களோ கூல் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, என்னாச்சு இந்த டியூக்கிற்கு, என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறாரா, இல்லை அவரின் ட்விட்டர் கணக்கை யாராவது ஹேக் செய்துவிட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தர்பார் படத்தில் பில் டியூக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமோ இல்லை தன் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று பின்னர் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X