வேற லெவல் சம்பவம் காத்திருக்கு..தங்கலான் படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம் யாரு தெரியுமா?

சென்னை : விக்ரம் மற்றும் பா. ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் தங்கலான் படத்தில், ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.

சியான் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. நடிகர் கமல் எப்படி தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுகிறாரோ அதைப்போல விக்ரமும் தனது கதாபாத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.

தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

சியான் விக்ரம்

சியான் விக்ரம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்தகரிகாலனாக கலக்கி இருந்தார். ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரம் விக்ரமிற்கு பக்காவாக பொருத்தி இருந்தது. குறிப்பாக சோழா...சோழா... பாடலில் விக்ரமின் டான்ஸ்சை பார்த்து வாவ்.. என்று சொல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிக்கு அழகாக ஆடி இருப்பார் விக்ரம்.

தங்கலான்

தங்கலான்

இந்தப்படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்திற்கு தங்கலான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்புக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

கேஜிஎப்பில் படப்பிடிப்பு

கேஜிஎப்பில் படப்பிடிப்பு

கேஜிஎஃப் திரைப்படத்தைப் போல, கோலார் தங்கவயலில் தமிழர்கள் பட்ட துயரத்தை கூறும் வகையில் தங்கலான் படம் பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தங்கலான் படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் கர்நாட மாநிலம் கேஜிஎப்பில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் படத்தில் இணைந்த நடிகர்

தங்கலான் படத்தில் இணைந்த நடிகர்

இந்நிலையில், தங்கலான் திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பிரபல ஹாலிவுட் பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா தங்கலான் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் டேனியல் கால்டகிரோன், வேட்டைக்காரன் கெட்டப்பில் இருப்பதால், இப்படத்தில் அவர் அந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 50 வயதான டான் கால்டஜிரோனா இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தி பீச், தி பியானிஸ்ட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X