Denzil: முதல் படத்திலேயே இப்படியொரு எக்ஸ்பீரியன்ஸ்.. லியோ பட நடிகர் டென்சல் ஸ்மித் சொன்னது இதுதான்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தற்போது படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
படத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் டென்சல் ஸ்மித் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

முதல் தமிழ் பட அனுபவத்தை பகிர்ந்த டென்சில் ஸ்மித்: பிரபல பாலிவுட் நடிகர் டென்சல் ஸ்மித், பாலிவுட்டில் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் டெனட் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இவர் விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டர் என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் படத்தின் 52 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், அந்த ஷெட்யூலில் டென்சல் ஸ்மித் பங்கேற்கவில்லை.
மாறாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் டென்சல் கலந்துக் கொண்டு நடித்து முடித்துள்ளார். இவரது கேரக்டருக்கான காட்சிகளை 3 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் படத்தில் கண்டிப்பாக வில்லனாகத்தான் நடித்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. படத்தில் மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் என அதிகமான நடிகர்கள் வில்லன் கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில், டென்சல் ஸ்மித்தும் வில்லனாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில தினங்களாக இணையதளத்தையே அதிரடித்து வருகிறது. அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போஸ்டர்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் இந்தி போஸ்டர் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் நடிகர்களும் படம் குறித்த தங்களது பேட்டிகளையும் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தில் நடித்துள்ள டென்சல் ஸ்மித்தும் படம் குறித்தும் விஜய் குறித்தும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
லியோ தன்னுடைய முதல் தமிழ்ப்படம் என்று குறிப்பிட்டுள்ள டென்சல், முதல் படத்திலேயே விஜய் மற்றும் லோகேஷுடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்தப் படத்தில் தான் 3 நாட்கள் மட்டுமே நடித்துள்ளதாகவும் தன்னுடைய போர்ஷன்கள் அனைத்தும் விஜய்யுடன் அமைந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தான் எடுக்கக்கூடிய காட்சிகள் மற்றும் அதன் ரிசல்ட் குறித்து தெளிவான மனநிலையை லோகேஷ் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் விஜய்யின் அர்ப்பணிப்பால் தான் அதிகமாக கவரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரிடமிருந்து இது மிகப்பெரிய பாடமாக தனக்கு அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சூட்டிங்கின்போது, மற்றவர்கள் காட்சிகளிலும் விஜய் அதே இடத்தில் அமர்ந்து பார்த்ததையும் அவர் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











