ஜெகமே தந்திரம் படம் பத்தி ஹாலிவுட் நடிகரோட வைரல் ஸ்டேட்மெண்ட்... சூப்பரப்பு!
நியூயார்க் : தனுஷ் -ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெகமே தந்திரம்.
இந்த படம் வரும் ஜூன் 18ம் தேதி ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ படம் மற்றும் படக்குழு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
Recommended Video

ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் வரும் ஜூன் 18ம் தேதி ஓடிடியில் நேரடியாக படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதனிடையே, இந்த படம் 17 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ
ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ப்ரேவ்ஹார்ட், ட்ராய், கேம் ஆப் த்ரோன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நம்ப முடியாத திறமை
இதனிடையே படத்தின் ஜேம்ஸ் காஸ்மோ தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இந்தியாவில் சிறப்பான படத்திற்காக நேரத்தை செலவிட்டுள்ளதாகவும், இந்தியா எவ்வளவு அற்புதமான நாடு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ளவர்கள் நம்ப முடியாத திறமையுடன் உள்ளதாகவும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











