ஸ்கூல் ஆப் ராக்… கெவின் கிளாக்… சாலை விபத்தில் உயிரிழந்தார் !

சிகக்கோ: ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 32.

அவொண்டேல் பகுதியில் இவர் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியதில் இவர் உயிரிழந்ததாக சிகாகோ போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டி வந்த 20 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

13 வயது சிறுவனாக

13 வயது சிறுவனாக

2003ம் ஆண்டு வெளியான ஸ்கூல் ஆப் ராக் திரைப்படத்தில் 13 வயதான டிரம்மர் ஃப்ரெடி வேடத்தில் கெவின் கிளாக் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் கெவின் ராக் ஒரு இசையமைப்பாளராகவும் இருந்து உள்ளார்.

பலரும் இரங்கல்

பலரும் இரங்கல்

கெவின் கிளாக்கின் இறப்பு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, பேரழிவு தரும் செய்தி. கெவின் நம்மை விட்டு போய்விட்டார். இந்த வலியானது அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இசையை மிகவும் நேசித்தார்

இசையை மிகவும் நேசித்தார்

கெவின் கிளார்க்கின் தாய் அலிசன், சிகாகோ சன் டைம்ஸிடம் ஒரு புதிய இசைக்குழுவை கெவின் உருவாக்கி உள்ளார். மேலும், அவர் இசையை மிகவும் நேசித்தார், அவர் ஒரு திறமையான நடிகர், ஸ்கூல் ஆஃப் ராக் படத்திற்காக 12 வயதில் ஆடிஷன் சென்ற போது அவருக்கு ஒரு நடிகராக எந்த திட்டமும் இல்லை. இருப்பினும் டிரம்மர் ஃப்ரெடி ஜோன்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரின் மனதையும் வென்றார் என்று கூறியுள்ளார்.

வேதனை தருகிறது.

வேதனை தருகிறது.

ஸ்கூல் ஆப் ராக் படத்தில் நடித்த மிராண்டா காஸ்கிரோவ் சமூக பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார் இன்று இந்த செய்தியை கேட்டு திகைத்து மிகவும் வேதனை அடைகிறேன். உலகம் ஒரு அற்புதமான ஆன்மாவை இழந்து விட்டது. உங்கள் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X