ஹாலிவுட் நடிகர்கள் வேலைநிறுத்தம்… திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி முடங்கியது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது நடிகர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதால், ஹாலிவுட்டில் பட தயாரிப்பு வேலைகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது

ஊதியம் குறைவு மற்றும் Artificial Intelligence அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் கலிபோர்னியாவில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஸ்டுடியோவுக்கு வெளியே எழுத்தாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Hollywood actors have announced they will join an ongoing strike by screenwriters in the industry

இரண்டு மாதத்திற்கும் மேலாக நடந்த வந்த இந்த போராட்டத்தால், டிவி தொடர்கள், இரவு நேர டிபர்ட், திரைப்படம் மற்றும் ஸ்ட்ரீமிங் தயாரிப்புகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டது.

தொடர் போராட்டம்: எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளனர். ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரன்ஸ், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக், ரம மலெக் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா திரைப்பட வரலாற்றில் இதுபோன்ற வேலைநிறுத்தம் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

Hollywood actors have announced they will join an ongoing strike by screenwriters in the industry

நள்ளிரவு முதல் போராட்டம்: 1 லட்சத்து 60 ஆயிரம் நடிகர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் (Screen Actors Guild) அமைப்பு இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வால்ட் டிஸ்னி மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்டுடியோக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர் & டெலிவிஷன் தயாரிப்பாளர்களுடன் புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டத் தவறியதால், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படங்கள் நிறுத்திவைப்பு: இதனால், அமெரிக்காவில் திரைப்படம் மற்றும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிக்கா விட்டால், பிரபலமான தொடர் மற்றும் திரைப்படங்கள் வெளியாவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ள, மார்வலின் Blade மற்றும் Thunderbolts போன்று படங்கள் தொழிலாளர் பிரச்னை தீர்க்கப்படும் வரை ரிலீஸ் நிறுத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X