Don't Miss!
- News
"சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை... மத குருக்கள்தான் உருவாக்கியுள்ளனர்".. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பேச்சு
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
- Automobiles
சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!! தமிழ்நாட்டுக்கும் இப்படியொரு சட்டம் தாங்க தேவை
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரொம்ப பெருமையா இருக்கு.. கமலை பாராட்டிய ஹாலிவுட் ஹீரோயின்.. யாருன்னு தெரியுமா!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கடந்த 11 நாட்களில் படம் 320 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.
இதையடுத்து கமல்ஹாசனுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு
சிகிச்சைக்காக
செல்லும்
டி.
ராஜேந்தர்..
நேரில்
சந்தித்து
நலம்
விசாரித்த
கமல்!

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம். இந்தப் படத்தின் சிறப்பான காட்சி அமைப்புகள், மிரட்டலான திரைக்கதை, சிறப்பான கேரக்டர் தேர்வு அவர்களை சிறப்பாக பயன்படுத்தியது உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தப் படம் கடந்த இரண்டு வாரயிறுதிகளை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் ரிப்பீட்டட் ஆடியன்சை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்தப் படம் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

சிறப்பான வசூல்
படம் கடந்த 11 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 320 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளது. தொடர்ந்து படத்தை ரசிகர்கள் அரங்கு கொள்ளாத காட்சிகளாக பார்த்து வரும் நிலையில், வார நாட்களிலும் தொடர்ந்து 3வது வாரயிறுதியிலும் மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் கமல்
கமல் 4 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை, அரசியல், பிக்பாஸ் உள்ளிட்டவற்றில் அவர் மிகவும் பிசியாக இருந்ததும் இதற்கு காரணம். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள் வாழ்த்து
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் கமல் ஐதராபாத் சென்ற போது, சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நாயகன் சல்மான் கான் கமல் மற்றும் லோகேஷை சந்தித்து படத்திற்கு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். கோவை சரளா உள்ளிட்ட செம்பி டீமும் கமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் நாயகி வாழ்த்து
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நாயகி மெக்கன்சி வெஸ்ட்மோர் கமலின் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அவர் கமல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். விரைவில் கமலை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாருடைய மகள் தெரியுமா?
மெக்கன்சி வெஸ்ட்மோரின் இந்தப் பதிவு கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மெக்கன்சி வெஸ்ட்மோரின் தந்தை மைக்கேல் வெஸ்ட்மோர் கமலின் இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.