வித்தியாச விரும்பி… கிறிஸ்டோபர் நோலனின் 51வது பிறந்த நாள்… குவியும் வாழ்த்து !

லண்டன் : இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

1970ம் ஆண்ட ஜூலை 30ந் தேதி லண்டனில் பிறந்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர் சிறந்த எழுத்தாளராவார். இவர் இதுவரை 11 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

எந்த ஹாலிவுட் நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு ஒரு இயக்குநர் மீது ரசிகர்களுக்கு கிரேஸ் இருக்கு என்றால் அது கிறிஸ்டோபர் நோலனுக்குக்குத்தான் இருக்கிறது. கிறிஸ்டோபருக்கு ஒரே ஒரு குறிக்கோள் தான், அது ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்வது. தரமான திரைப்படங்களை கொடுப்பது மட்டுமின்றி புதிராகவும் கொடுப்பதில் ஜகஜால கில்லாடி.

Following

Following

கிறிஸ்டோவரின் முதல் முழு நீளத் திரைப்பம் 1998ம் ஆண்டு வெளிவந்த Following திரைப்படமாகும். இப்படத்தில் ட்வீஸ்டுகளை படத்தில் ஆங்காங்கே வைத்து ரசிகர்களை உற்று நோக்கவைத்தார். இதற்கான க்ளுக்களையும் படம் நடுக சிதற விட்டிருப்பார்.

Memento

Memento

கிறிஸ்டோபர் நோலன் எடுத்த திரைப்படங்களில மாஸ்டர்பீஸ் எது என்றால், அது Memento திரைப்படமாகும் இத்திரைப்படம் 2000ம் ஆண்டு வெளியானது.படத்தின் கதையை சற்று குழப்பமானதாக்கி முடிவில் பக்காவாக முடித்து அனைவரையும் பிரம்பிப்பில் ஆழ்த்தினார். இத்திரைப்படம் தான் பின்னாளில் தமிழில் கஜினியாக உருவானது.

The presige.

The presige.

2006ம் ஆண்டு ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம் தான் The presige. ஒரு மேஜிக் நிபுணர் அவரின் திறமை வாய்ந்த இரண்டு சிஷ்யர்களுக்கும் நடக்கும் சண்டையே படத்தின் மையக்கரு. இந்த திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படமாகும்.

11 திரைப்படங்கள்

11 திரைப்படங்கள்

The Dark Knight, Inception, The Dark Knight Rises,Interstellar, Dunkirk,Tenet என 11 திரைப்படங்களை இயக்கிஉள்ளார். ஒவ்வொரு திரைப்படமும், ஒவ்வொரு மேஜிக் திரைப்படமாக இருக்கும். கடந்த ஆண்டு வெளியான Tenet கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

51வது பிறந்த நாள்

51வது பிறந்த நாள்

உலகில் தலை சிறந்த இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.தமிழ் ரசிகர்களும் நோலனின் பிறந்த நாளில் #christopherNolan என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X