இந்த படம் எப்போ அமெரிக்காவுல ரிலீஸாகும்? அட்லீயை திணறடித்த ஹாலிவுட் இயக்குநர்! #Bigil
Recommended Video
சென்னை: பிகில் படம் எப்போது அமெரிக்காவில் ரிலீஸாகும் என கேட்டு இயக்குநர் அட்லீயை ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் திணறடித்துள்ளார்.
அட்லீ, விஜய், ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிகில் படத்தின் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பட ரிலீஸ்க்காக காத்திருக்கின்றனர் விஜயின் ரசிகர்கள்.

அள்ளிய வியூஸ்
இந்நிலையில் நேற்று முன்தினம் பிகில் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆனது. இரண்டே முக்கால் நிமிடம் கொண்ட அந்த வீடியோ இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வீயூஸ்களை அள்ளியுள்ளது.

பாராட்டு
இதேபோல் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு லைக்ஸ்களும் குவிந்துள்ளது. படத்தின் ட்ரெயிலரை பார்த்து பிரபலங்கள் பலரும் இயக்குநர் அட்லீக்கும், நடிகர் விஜய்க்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திணறிய டிவிட்டர்
விஜயின் ரசிகர்கள் பிகில் ட்ரெயிலர் தொடர்பாக பல ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு ட்ரென்ட்டாக்கினர். இதனால் டிவிட்டர் தலம் திக்குமுக்காடியது.
யுஎஸ்ல எப்போ ரிலீஸ்
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பில் டுயூக், பிகில் படத்தின் ட்ரெயிலரை பார்த்துவிட்டு இயக்குநர் அட்லீக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கிரேட் ட்ரெயிலர்.. இந்த படம் அமெரிக்காவில் எப்போது வெளியாகிறது? ஹாலிவுட் பிரிமியர் ஷோ இருக்குமா? என்னுடைய டீமுக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி.. வாழ்த்துகள்.. என பதிவிட்டிருக்கிறார்.

படக்குழு மகிழ்ச்சி
ஹாலிவுட் இயக்குநர் பில் டுயூக்கின் இந்த டிவிட்டை பார்த்த அட்லீ நன்றி தெரிவித்திருப்பதோடு, நிச்சயம் தெரியப்படுத்துகிறேன் என்று பதில் தெரிவித்திருக்கிறார். பிகில் ட்ரெயிலர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தபோதும் ஹாலிவுட் இயக்குநரே ட்ரெயிலரை பார்த்து பாராட்டியிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











