நெட்பிளிக்ஸை ஏமாற்றிய ஹாலிவுட் இயக்குநர் கைது.. 22 மில்லியன் டாலர்.. சொகுசு கார், பங்களா வாழ்க்கை

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா காலத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு வரப்பிரசாதமாக ஓடிடி தளங்கள் கையிலேயே கிடைத்தன. நினைத்த நேரத்தில் பிடித்த படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்த்து ரசித்தனர். அதுவும், நெட்பிளிக்ஸில் வெளியான வெப் தொடர்கள், திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன. தற்போது, ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸை ஏமாற்ற நினைத்த பிரபல இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டரில் வெளியான புதிய படங்கள் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும். சில சமயம் புதிய படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரிடையாக ஓடிடி தளங்களில் வெளியாகும். இதை பிரீமியர் என சொல்கிறார்கள். அதேபோல், ஓடிடி தளங்களுக்கென்றே வெப் சீரிஸ்கள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பின் திரைக்கு வந்த படங்களுக்கு இருந்த வரவேற்பை விட ஓடிடி ரிலீசுக்கு பின்னர் பல படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. அதிக பார்வையாளர்களையும் கவர்ந்திருக்கிறது.

hollywood-director-carl-eric-rinsch-arrested-for-defrauding-netflix

அந்த வகையில் நெட்பிளிக்ஸில் வெளியான மகாராஜா, அமேசானில் வெளியான ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. அதேபோன்று நெட்பிளிக்ஸில் வெளியாகும் படங்களை காட்டிலும் வெப் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதனாலேயே வெவ்வேறு பிரிவுகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெப் தொடர்களை தயாரித்து வெளியிட ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக மனிஹெய்ஸ்ட், (Money Heist), டார்க் டிசையர் ('Dark Desire), சாண்ட் மேன், தி ஸ்குவிட் கேம் சீரிஸ் தொடர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

hollywood-director-carl-eric-rinsch-arrested-for-defrauding-netflix

ஹாலிவுட் இயக்குநர் கைது: இந்த தொடர்கள் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பிரபலம் அடைந்தன. வெப் தொடரில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. அந்த கதாப்பாத்திரத்தை வைத்தும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பிரபல ஹாலிவுட் இயக்குநர் வெப் தெ்ாடர் இயக்குவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

மாட்டிக்கினாரு ஒருத்தரு: ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச் என்பவர் ஒயிட் ஹார்ஸ் என்ற வெப் தொடரை இயக்குவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 22 மில்லியன் டாலர் பணத்தை சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால், இதுவரை அவர் ஒரு எபிசோட் கூட எடுக்காமல் அந்த பணத்தில் ஆடம்பரமான பங்களா, கிரிப்டோகரன்சி முதலீடு, சொகுசு கார்களை வாங்கி செலவழித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கார்ல் எரிக் ரின்ச் என்பவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

hollywood-director-carl-eric-rinsch-arrested-for-defrauding-netflix

ஆடம்பரம்: 22 மில்லியன் டாலர்களில் 3.7 மில்லியனில் ஆடம்பர சொகுசு விடுதி, மெத்தை படுக்கை அறை என 1 மில்லியன் டாலர் செலவு செய்திருக்கிறார். 5 ரோல்ஸ் ராய்ஸ் கார் மற்றும் ஒரு ஃபெராரி காரும் வாங்கியிருக்கிறார். 6.5 லட்சம் மில்லியனில் கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகளை வாங்கி குவித்திருக்கிறார். 1.8 மில்லியன் அவர் செலவு செய்த கிரெடிட் தொகைக்கே செலவழித்திருக்கிறாராம் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச். யாருப்பா இவரு முக்கி முக்கி வேலை பார்த்தாலும் இங்கு 50,000 சம்பளம் பெறுவது சவாலாக இருக்கிறது. 22 மில்லியன் டாலரை தண்ணீர் மாதிரி செலவழித்து விட்டு தொடரையும் எடுக்காமல் சொகுசாக வாழ்ந்திருக்கிறார் என நெட்டிசன்கள் குமுறுகின்றனர்.

FAQs
நெட்பிளிக்ஸில் ஹிட் அடித்த தமிழ் படம் எது?

மகாராஜா

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X